ராம் சரண் ,ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் விஸ்வாசம் வில்லன்!
ஹைதராபாத் : தமிழில் தொடர் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்தை இயக்க இருப்பது இந்த சில மாதங்களாகவே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் ராம்சரண் இதில் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை கக்யாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெகபதிபாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட்
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்றால் அது மிகையாகாது. அனைவரும் கமர்ஷியல் சினிமாக்களை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் பிரம்மாண்ட படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட் என ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து தமிழ் சினிமாவின் பெருமையை உலகறிய செய்தவர்.

படப்பிடிப்பு தொடங்க உள்ளது
இந்த படத்தின் முதல் காட்ட வேலைகள் விறுவிறு வேகத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் மிக விரைவிலேயே படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது.

ஜெகபதிபாபு
பொதுவாக ஷங்கர் திரைப்படங்கள் என்றாலே குண்டுமணி அளவுக்கு கூட கதை பற்றியோ அந்த படத்தில் நடக்கும் முக்கிய விஷயங்களைப் பற்றியோ பேச்சுக்கள் வெளிவராது அந்த அளவிற்கு மிகவும் கவனமாக பணியாற்றக் கூடியவர். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் நடிகரைப் பற்றிய தகவல் இப்பொழுது கசிந்துள்ளது. தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வரும் நடிகர் ஜெகபதிபாபு இதில் வில்லனாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது .

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் ஜெகபதிபாபு தமிழில் லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் இப்பொழுது ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் விஜய் சேதுபதியின் லாபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications











