சீரியல் நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்த நடிகர் யார் தெரியுமா? சினிமா பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஒருவர், அண்மையில் அளித்த பேட்டியில், ஒரு பிரபல நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். செய்தியாளர் அது யார் என்று கேட்டும் அந்த நடிகர் குறித்து அவர் தெரிவிக்காத நிலையில், அந்த ஹீரோ குறித்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,என்னுடைய முதல் திருமணம் முறிந்து போனது அனைவருக்கும் தெரியும், அண்மையில் தான் எனக்கு விவாகரத்து ஆனது. அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தற்போது தான் கைக்கு கிடைத்து இருக்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

இரண்டாம் திருமணம்: விதவையானாலும், விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டால். அவர்களை இந்த சமுதாயம் தப்பாகத்தான் பார்க்கிறது. ஆனால், கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு பல வகையில் பிரச்சனைகள் வரும். அக்கம் பக்கத்தில் இருக்கும் ஆண்களுடன், அந்த பெண் எதார்த்தமாக பேசினால் கூட, இது மற்றவர்களின் பார்வைக்கு தவறாக படுகிறது.
இதனால், நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணத்தை நிச்சயம் அனைவருக்கும் சொல்லித்தான் செய்வேன் என்றார்.
விளம்பரம் தேவையில்லை: மேலும் அர்ணவ், திவ்யா பிரச்சனையின் போது நான் பல சேனலுக்கு பேட்டி கொடுத்தேன். அப்போது பலர் என்னை விளம்பரத்திற்காக பேசுகிறேன் என்றார்கள் உண்மையில் அப்படி இல்லை. எந்த விளம்பரத்திற்காகவும் நான் அப்படி செய்யவில்லை. திவ்யா ஸ்ரீதரை எனக்கு நன்றாக தெரியும். இதனால், அவருக்காக நான் பேசினேன். அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் பேசி இருப்பேன்.
நடிகர் அழைத்தார்: தொடர்ந்து பேசிய ரிஹானா, ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆடிஷனுக்கு அழைத்தார்கள், நடித்தேன். அப்போது என்னை கூப்பிட்டு நீங்கள் நல்ல நடிச்சீங்கனு சொல்லி நம்பர் கேட்டார், நானும் கொடுத்தேன் ஆனால், அதன் பின் தொடர்ந்து மெசேஜ் பண்ணிட்டே இருந்தார். அவருடன் பேசும் போதே ஏதோ தப்பா இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். அதனால் அவரை பிளாக் பண்ணிட்டேன் என்றார். ஆனால், அந்த நடிகர் யார் என்று ரிஹானா சொல்லவேயில்லை.


Click it and Unblock the Notifications











