தரக்குறைவாக நடந்து கொண்ட சீனு ராமசாமி.. கொடைக்கானலில் நடந்தது என்ன? விளாசிய விமர்சகர்!

சென்னை: சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமானவர் மனிஷா யாதவ்.

Vithagan Sekar talks about seenu ramasamy and manisha yadav sexual harassment issue

ஆனால், அவரை படப்பிடிப்புக்காக கொடைக்கானல் அழைத்துச்சென்ற சீனு ராமசாமி பாலியல் தொல்லை அளித்ததால், அந்த படத்திலிருந்து மனிஷா விலகியதாகவும் பிஸ்மி குற்றஞ்சாட்டி இருந்தார்.

மனிஷா யாதவ்: இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி வரும் நிலையில், பிரபல சினிமா விமர்சகரான வித்தகன் சேகர் இதுகுறித்து விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிஸ்மி கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை.

பாலியல் தொல்லை: ஆனால், மனிஷா யாதவ் 2014ம் ஆண்டு ஒரு பேட்டி கொடுத்தார். அதில், சீனி ராமசாமி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக இடம் பொருள் ஏவல் படத்திலிருந்து விலகுகிறேன் என கூறியிருந்தார். இதற்கு, அப்போதே விளக்கம் அளித்த சீனு ராமசாமி, நான் மனிஷாவை அந்த படத்தைவிட்டு தூக்கவில்லை. இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் அதில் மனிஷா யாதவ், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்தார்.

சீனி ராமசாமி விளக்கம்: இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பின் மனிஷா யாதவிற்கு அந்த கிராமத்து கதாபாத்திரம் செட்டாகவில்லை. இதனால், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நகரத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கூறினேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்குஜோடியாகத்தான் நடிப்பேன் என்று கூறியதாக சீனு ராமசாமி விளக்கம் கொடுத்திருந்தார்.

மனிஷாவிற்கு நியாயம்: த்ரிஷாவை அவதூறாக பேசிய மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் குவிந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால், சீனு ராமசாமிக்கு இதுவரை யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அவர் ஒரு தேசிய விருது பெற்ற ஒரு பெரிய இயக்குநர், அவருக்கு சினிமாவில் தனி பெயர் இருக்கிறது என்பதால், அவரை யாரும் கண்டிக்கவில்லை. த்ரிஷாவிற்கு நியாயம் கிடைத்துவிட்டது, ஆனால், மனிஷா யாதவிற்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை இனி கிடைக்கப்போவதும் இல்லை என சினிமா விமர்சகர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X