»   »  விவேகம் சென்சார் முடிந்தது... யுஏ சான்றுடன் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது!

விவேகம் சென்சார் முடிந்தது... யுஏ சான்றுடன் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்குமார் நடித்துள்ள விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். படத்துக்கு யு ஏ சான்று வழங்கியுள்ளனர்.


Vivegam censored, releasing on Aug 24th

அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் சான்று கிடைப்பது தாமதமானதால், ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. சென்சார் குழு நேற்று படம் பார்த்தது. படத்துக்கு யு ஏ சான்று வழங்கியது. சென்சார் சான்று கிடைத்த உடனே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.


உலகம் முழுவதும் ஆகஸ்ட் 24-ம் தேதி விவேகம் வெளியாகும் என தகவல் வெளியானதை அடுத்து, அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைத் தளங்களில் விவேகம் பட ரிலீஸ் தேதி வைரலாகி வருகிறது.

English summary
Ajith's Vivegam will be hit the screens worldwide on August 24th

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil