சென்னை பாக்ஸ் ஆபீஸில் இன்னும் கில்லியாக இருக்கும் விவேகம்
சென்னை: விவேகம் படம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் இன்னும் கில்லியாக உள்ளது.
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் படம் ரிலீஸான உடன் அதை பற்றி எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அத்தகைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை.

படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூல் செய்ததுடன் பாகுபலி 2 பட சாதனையையும் முறியடித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபீஸில் விவேகம் படம் இன்னும் கில்லியாக உள்ளது.
படம் ரிலீஸான 2 வாரங்களில் சென்னையில் மட்டும் ரூ. 8. 57 கோடி வசூலித்துள்ளது. இதே இரண்டு வாரங்களில் சென்னையில் பாகுபலி ரூ. 8.25 கோடி வசூலித்திருந்தது.
இந்நிலையில் அஜீத் மீண்டும் சிவாவுடன் கூட்டணி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications