»   »  சாதனை- ரஜினிக்கு 72, அஜீத்துக்கு 68: இது என்ன கணக்குனு தெரியுதுல்ல?

சாதனை- ரஜினிக்கு 72, அஜீத்துக்கு 68: இது என்ன கணக்குனு தெரியுதுல்ல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் விவேகம் டீஸர் வெளியான 68 மணிநேரத்தில் 1 கோடி வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கதத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பு விஷமிகள் அதை லீக் செய்துவிட்டனர்.


அந்த லீக் வேலையை பார்த்த ஆள் இன்னும் சிக்கவில்லை.


50 லட்சம்

50 லட்சம்

டீஸர் வெளியான 12 மணிநேரத்திற்குள் அதை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். டீஸர் புதிய சாதனை படைக்க முழுக்க முழுக்க தல ரசிகர்களே காரணம்.
கபாலி

கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி டீஸர் வெளியான 24 மணிநேரத்தில் தான் அதற்கு 50 லட்சம் வியூஸ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. விவேகம் டீஸரின் சாதனையால் தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


1 கோடி

1 கோடி

விவேகம் டீஸர் வெளியான 68 மணிநேரத்தில் அதற்கு 1 கோடி வியூஸ் கிடைத்துள்ளது. யூடியூப்பில் 1 கோடி வியூஸ் பெற கபாலி பட டீஸருக்கு 72 மணிநேரம் ஆனது.


ரசிகர்கள்

ரசிகர்கள்

விவேகம் டீஸர் வரட்டும் அதை பல சாதனைகள் புரியச் செய்யாமல் ஓய மாட்டோம் என்று தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர். சொன்னபடியே அவர்கள் செய்துவிட்டனர்.


English summary
Vivegam teaser has got 10 million views in 68 hours while Kabali teaser took 72 hours to achieve this feat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil