அதிருது யுட்யூப்.. 12 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டியது விவேகம் டீசர்!
அஜித் நடித்துள்ள விவேகம் பட டீசர் வெளியாகி இணையத்தை அதிர வைத்துக் கொண்டுள்ளது. நேற்று நள்ளிரவில் வெளியான இந்த டீசர் 12 மணி நேரத்துக்குள் 2.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
அஜித் பட டீசர் ஒன்று இத்தனை சீக்கிரம் இவ்வளவு பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை.

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை சிவா இயக்கியுள்ள படம் இது. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் விவேக் ஓபராய் முதல் முறையாக தமிழில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த டீசர் வெளியீடு குறித்து இயக்குநர் சிவா அறிவித்ததிலிருந்தே அஜித் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். அந்த ஆர்வத்தை டீசர் பார்ப்பதில் காட்டியுள்ளனர்.
12 மணி நேரத்துக்குள் 2.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று விவேகம் டீசர் விரைவில் பத்து மில்லியனைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications