»   »  மே 18ம் தேதி விவேகம் டீஸர் வெளியீடு: தல ரசிகர்கள் சூப்பர் ஹேப்பி அண்ணாச்சி

மே 18ம் தேதி விவேகம் டீஸர் வெளியீடு: தல ரசிகர்கள் சூப்பர் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் டீஸர் வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குனர் சிவா அறிவித்துள்ளார்.

அஜீத் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடம் எங்கும் பனியாக இருப்பதை அந்த படத்தில் நடிக்கும் பிரபலங்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.


அஜீத்தின் பிறந்தநாள் அன்று விவேகம் படத்தின் டீஸர் வெளியாகும் என்று அவரின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.


ஏமாற்றம்

ஏமாற்றம்

தல பிறந்தநாள் அன்று டீஸர் அல்லது ஒரு போஸ்டராவது சிவா வெளியிடுவார் என்று தல ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. சிவா அமைதியாக இருந்துவிட்டார்.


டீஸர்

சிவா ஏதாவது அறிவிப்பு வெளியிட மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அவர் விவேகம் பட டீஸர் மே 18ம் தேதி வெளியிடப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


நல்ல செய்தி

நம்பா நல்ல செய்தி இன்னைக்கு தான் சொல்லி இருக்க என்று டீஸர் வெளியீடு குறித்து சிவா அறிவித்ததற்கு ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


நன்றி

ரொம்ப நன்றி சிவா ஜி என டீஸர் அறிவிப்பை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.


English summary
Director Siva announced on twitter that Ajith starrer Vivegam teaser will be released on may 18th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil