twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செய்தி பார்த்தீர்களா... மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. நடிகர் விவேக் தரும் அலர்ட்!

    |

    சென்னை: நடிகர் விவேக் மிகப் பெரிய இயற்கை ஆர்வலர். இதுவரை பல ஆயிரக் கணக்கான மரக்கன்றுகளை (சாரி லட்சங்களைத் தாண்டிவிட்டது என்றும் சொல்கிறார்கள்) தனது ஆசான் அப்துல் கலாம் அறிவுரையின் பேரில் நட்டு வைத்து வைத்து வருகிறார். இதை இப்போதும் தொடர்ந்து செய்து வருகிறார்.

    நடிகர் விவேக்கின் இந்த செயல் அலட்சிய படுத்த முடியாத அத்தியாவசியமான ஒன்று.. அவசியம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய விஷயம். அப்துல் கலாமை மதிக்கும் மக்கள் இதை இனிமேல் தாங்களாக முன்வந்து செய்யும் செயல் தமிழ் நாட்டில் நடக்க வேண்டும்.

    Vivek alerts people to save water and plant trees

    இது குறித்துதான் விவேக் டுவிட்டர் வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்...

    பத்து வருடங்களாக சொல்லியும் செய்தும் வருகிறேன். கோடைகளில் குளம், குட்டை தூர் வருவதும், கோடை முடியும்போது மரம் நடுவதும் நம் மக்களின் கடமை.

    #dharbar - தொடர்ந்து வெளியாகும் ரஜினி, நயன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்... கியாரே செட்டிங்கா? #dharbar - தொடர்ந்து வெளியாகும் ரஜினி, நயன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்... கியாரே செட்டிங்கா?

    தண்ணீர் பிரச்சினை பூதாகாரமாகிவிட்டது. விழித்துக்கொள்ளுங்கள். மக்களே செய்தி பார்த்தீர்களா என்றும் ஒரு பேப்பர் கட்டிங் போட்டிருக்கிறார்.

    அதில் வட சென்னையில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை என்று தலைப்பு செய்தி உள்ளது.

    என்னதான் நடிகர் விவேக் காமெடி நடிகர் என்று நடிக்க வந்தாலும், அவர் தமது காமெடியில் பல நல்ல விஷயங்களை விழிப்புணர்வாக சொல்லிவிட்டு போவார்.

    இப்போது அவர் தான் விழிப்புணர்வு கொடுப்பது போலவே பல நல்ல விஷயங்களை செய்து காண்பித்தும், அந்த விழிப்புணர்வை நிஜமாக்குகிறார்.

    மரம் என்பது நமது உயிர்காக்கும் காற்றை தருவது. அதுக்கு ஆதாரமாக இருப்பது நீர். இரண்டும் வேண்டும் என்றால் குளம் குட்டைகளைத் தூர் வாருவதும், மரம் நடுவதும் அவசியம்தானே.... குடிக்கத் தண்ணி இல்லாம கஷ்டப்படுவோருக்கு விவேக்கின் டிவீட் பளிச்சென புரியும்.

    English summary
    Actor Vivek is the biggest natural activist. So far, many thousands of saplings (who say they have exceeded lakhs of lakhs) have been put on the advice of his blessing Abdul Kalam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X