Indian 2 - இந்தியன் 2வில் புதிய தொழில்நுட்பம்.. மீண்டும் உயிரோடு வருகிறார் விவேக் - அசத்தும் ஷங்கர்

சென்னை: Indian 2 (இந்தியன் 2) மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணுவை ஆகியோரின் காட்சிகளை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்க இந்தியன் 2 இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது.

Vivek And Nedumudi Venu is being recast in Indian 2 using new technology

இந்தியன் 2வில் விபத்து: ஷூட்டிங் நிறுத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.

களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்: இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.

டேக் ஆஃப் ஆன இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் நடந்தன. தென் ஆப்பிரிக்காவில் ரயில் விபத்து தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அங்கு நடந்த ஷெட்யூல் முடிவடைந்தை அடுத்து சென்னையில் செட் போட்டு ஷூட்டிங் நடக்கப்போகிறதாம்.

Vivek And Nedumudi Venu is being recast in Indian 2 using new technology

உயிரிழந்த விவேக், நெடுமுடி வேணு: இதற்கிடையே இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு விவேக் கமிட்டாகியிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். அதேபோல் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நெடுமுடி வேணுவும் இதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரும் உயிரிழந்தார். இதன் காரணமாக அவர்களுக்கு பதில் வேறு யாரையும் நடிக்க வைக்கலாமா என்ற தீவிர சிந்தனையில் இருந்தார் ஷங்கர்.

புதிய தொழில்நுட்பம் மீண்டும் விவேக்: இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் புதிய தொழில்நுட்பம் ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறதாம். அதன்படி வேறு யாராவது ஒருவர் காட்சிகளில் நடிப்பார்கள். அவர் நடித்ததை விவேக் நடித்தது போல் மாற்றிவிடக்கூடிய வசதி அந்த தொழில்நுட்பத்தில் இருக்கிறதாம். இதேபோல் நெடுமுடி வேணு போர்ஷனுக்கும் இதே திட்டத்தை கையில் எடுத்திருக்கிறாராம் ஷங்கர்.

தற்போது இரண்டு பேருக்கு டப்பிங் பேசுவதற்கு மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞரை தேடும் படலத்தில் இருக்கிறாராம் ஷங்கர். தொழில்நுட்பம் மூலம் மீண்டும் திரையில் தோன்றவிருக்கும் விவேக்கை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X