நடிப்பு அரசி.. சரோஜா தேவி அம்மா.. பிறந்த நாள் வாழ்த்தில் வித்தியாசம் காட்டிய விவேக்!
சென்னை : நடிகர் விவேக் வித்தியாசமான முறையில் சரோஜா தேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்கள் எப்போதும் கிண்டலுடன் தனது கருத்துக்களை சொல்வதில் வல்லவர். இவர் தற்போது நடிப்பதை குறைத்து விட்டாலும், இவரின் நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழியாதவை நடிகர் விவேக் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியின் ரசிகர் அதை அவரே பலமுறை பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

தற்போது சரோஜாதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விவேக் தனது ஸ்டைலில் சரோஜா தேவிக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். நடிகர் விவேக் குரு என் ஆளு படத்தில் புதிய பறவை படத்தில் சரோஜா தேவி நடிப்பதை போல் வேடமிட்டு சொல்லுங்கள் கோப்பால், சொல்லுங்க என்று நகைச்சுவை செய்து இருப்பார், அதில் ஒரு காட்சியின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ள விவேக் அதன் அருகில் சரோஜா தேவியின் புகைப்படத்தை போட்டு ஒப்பிட்டு நகைச்சுவையான முறையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அதில் கூறும் போது எப்பொழுதும் நடிப்பு அரசி, பிறந்த நாள் வாழ்த்துகள் சரோஜா தேவி அம்மா என்று பதிவேற்றி இருக்கிறார். இதன் கீழ் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள்,கோபால் கோபால் என்று கூறி கமெண்ட்டுகளை போட்டு அந்த நகைச்சுவை காட்சியை நினைவு கூறியுள்ளனர்.

நடிகர் விவேக் கடைசியாக பிகில் படத்தில் நடித்து இருந்தார். கிட்ட தட்ட தமிழ் சினிமாவில் 33 வருடங்களாக கலைப்பணி ஆற்றி வருகிறார் விவேக். இவரை கௌரவிக்கும் வகையில் 2009ல் பத்மஶ்ரீ பட்டம் இந்திய அரசால் வழங்கபட்டது .
தற்போது விவேக் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் - விவேக் இணையும் நான்காவது படமாகும் இது. இதற்கு முன்பே பாய்ஸ் , அந்நியன் மற்றும் சிவாஜி படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படங்கள் வெற்றிப்பெற்றது போல இந்தியன் 2 படத்திலும் சிறந்த நகைச்சுவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











