twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏலே மரங்களை நடுங்க.. குளம் குட்டைகளை தூர் வாருங்க... விவேக் அழைப்பு!

    |

    சென்னை: நடிகர் விவேக் சென்னையில் குடி தண்ணீருக்காக மக்கள் படும் அவஸ்தைகளை காணொளி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கார்.

    விவேக் தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் மக்கள் தண்ணீருக்கா நீண்ட நெடும் வரிசையில் காலி குடங்களை போட்டு வைத்து காத்திருக்கும் காணொளியை பதிவிட்டு உள்ளார்.

    Vivek calls people to plant trees

    அதோடு இந்த காணொளி சென்னையின் குடி நீர் தட்டுப்பாட்டை காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுவதிலும் வர இருக்கும் அபாயம் ஒரே தீர்வு மரம் நடுதல்..ஏரி குளம் சீரமைத்தல் நீர் சிக்கனம். என்று பதிவிட்டு மாணவர் இளைஞர் கவனத்திற்கு என்றும் பதிவிட்டு இருக்கார்.

    இவரை ஃபாலோ செய்யும் சங்கர் என்கிற ஒருவர் மகிழ்ச்சி அண்ணா என்று பதிவிட்டு ஆனாலும் இருக்கும் மரங்களை மின்சார துறை. போக்குவரத்து துறை வெட்டாமல் இருந்தாலே நகரங்களில் மரங்களில் எண்ணிக்கை குறைந்திருக்காதே...

    மாணவர்கள் இளைஞர்கள் கவனித்தால் மட்டும் போதாது... அரசும் கவனிக்க வேண்டும் என்று விவேக்கின் ட்வீட்டுக்கு பதில் பதிவு இட்டுள்ளார். இவர் கருத்திலும் உண்மை இருக்கத்தானே செய்யுது.

    கிழக்கு வாசல்.. பரபரப்பு தூள் கிளப்புது.. வன்முறை, பகை பத்திகிட்டு எரியுது! கிழக்கு வாசல்.. பரபரப்பு தூள் கிளப்புது.. வன்முறை, பகை பத்திகிட்டு எரியுது!

    காவிரி டெல்டா பகுதிகளில் பல இடங்களில் ஆறு சீர் செய்யப்படாமல் உள்ளது. கர்நாடகாவில் எப்படியும் மழை பெய்யும்.தண்ணீர் போக வழியின்றி அவர்கள் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட்டாக வேண்டும்.

    இதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் அத்தனை பகுதிகளையும் தூர் வார வேண்டும் சீர் செய்ய வேண்டும்.

    நடிகர் விவேக்கின் விழிப்புணர்வு பல இளைஞர்களை.. கிராமங்களை சென்று அடைந்து பல விஷயங்களை அவர்கள் சீர் செய்து வருகிறார்கள் என்பது அவரது ஃபாலோயர்ஸ் பதில் ட்வீட்டில் புரிகிறது.

    English summary
    Actor Vivek has made a vigilant awareness about the popularity of drinking water in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X