மலேசியாவில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக்!
சின்னக் கலைவாணர் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் விவேக் தன்னுடைய பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாடினார்.
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காமெடி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் விவேக். பல ஆண்டுகளாக தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

நகைச்சுவை மேதை கலைவாணருக்குப் பின் திரையில் வெறும் நகைச்சுவையோடு பகுத்தறிவுக் கருத்துக்களையும் சொல்வதில் வெற்றி கண்டவர் என்பதால் அவரை சின்னக் கலைவாணர் என்று பாராட்டுகின்றனர் ரசிகர்கள்.
நிஜத்திலும் தனது செயல்கள் மூலம் வேறுபட்ட மனிதராக நிலை நிறுத்தி வருகிறார். தனி மனிதராக அவர் ஆரம்பித்த புசுமைத் திட்டம் மூலம் பல லட்சம் மரங்களை நட்டு, சுற்றுச் சூழல் நண்பனாகத் திகழ்கிறார்.
விவேக்குக்கு இன்று பிறந்த நாள். ஆனால் இந்த நாளைக் கொண்டாட அவர் இந்தியாவில் இல்லை. மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றுள்ள அவர் அங்கேயே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
Comments


Click it and Unblock the Notifications