விஷால் மற்றும் தனுஷுடன் நேரடியாக மோதும் விவேக்!
விவேக், தேவயானி நடித்துள்ள எழுமின் திரைப்படம் அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.
சென்னை: விவேக், தேவயானி நடித்துள்ள எழுமின் திரைப்படம், சண்டக்கோழி 2, வடசென்னை படங்கள் ரிலீசாகும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.
"வையம் மீடியாஸ்" சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் "எழுமின்". விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.

முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், ரிலீசில் பிரச்சினை ஏற்பட்டது. கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள நோட்டா திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவானது.
இதனால் தயாரிப்பாளர் விஜி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார். இதையடுத்து, கவுன்சிலில் சமரச பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் அதில் சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருப்பதாக வி.பி.விஜி தெரிவித்துள்ளார்.
தியேட்டர்கள் கிடைக்க விஷால் உறுதியளித்ததைத் தொடர்ந்து, வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் எழுமின் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் "வடசென்னை" திரைப்படமும், விஷால் நடித்துள்ள "சண்டக்கோழி2" திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. எனவே விஷாலுடனும், தனுஷுடனும் பல படங்களில் சேர்ந்து நடித்த விவேக், அவர்களுடன் நேருக்கு நேர் மோத தயாராகிவிட்டார்.
[ "என் வாழ்வை மாற்றப்போகும் படம் 'பரியேறும் பெருமாள்'"... கதிர் நம்பிக்கை ! ]
இந்த பட விவகாரத்திற்கு பிறகு தான், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் கூடி, மாதத்தின் முதல் மற்றும் 3வது வாரத்தில் பெரிய பட்ஜெட் படங்களும், 2வது மற்றும் 4வது வாரங்களில் சிறிய பட்ஜெட் படங்களும் வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தயாரிப்பாளர் சென்சார் சான்றிதழை வழங்கிய பிறகே ரிலீஸ் தேதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











