அடங்கொக்கா மக்கா! தமிழ்பட காமெடி சைனா வரை போயிருச்சா! ஹேப்பி மோடில் பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு
சென்னை: தமிழ் பட டயலாக்கிற்கு சீனர்கள் இருவர் டப்ஸ்மேஷ் செய்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் தன்னுடைய ரூட்டில் எந்த அலப்பறையும் செய்யாமல் சென்று கொண்டிருக்கிறார் விவேக்.
செம சீரியஸான மேட்டரையும் ஜாலியாக போறப்போக்கில் அடிச்சுவிடுவார் விவேக். விவேக்கின் சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியிருக்கிறது.

தனுஷ் - விவேக் டயலாக்
இந்நிலையில் நடிகர் விவேக்கின் காமெடி டயலாக் ஒன்று சீனர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. உத்தமபுத்திரன் படத்தில் இடம்பெற்றிருந்த தனுஷ் விவேக் இடையிலான டயலாக் தான் அது.

சீனர்கள் டப்ஸ்மேஷ்
அடங்கொக்கா மக்கா.. என்ற அந்த டயலாக்கிற்கு சீனர்கள் இருவர் டப்ஸ்மேஷ் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சைனா வரை போயிருச்சா
இந்த வீடியோவை நடிகர் விவேக் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அடங்கொக்கா மக்கா! தமிழ்பட காமெடி சைனா வரை போயிருச்சா!!! என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
மேட்ச் ஆகுது
இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் விவேக்கை பாராட்டி வருகின்றனர். நீங்க போட்ருக்க டைலாக்கும் உங்க டிபிக்கும் செமயா மேட்ச் ஆகுது சார் என்று கூறியுள்ளார் இவர்.
உங்களால போயிருக்கு
அது நீங்க நடிச்சதுனால போயிருக்கு சார் என்கிறார் இந்த நெட்டிசன்.
தமிழ் சினிமாவுக்கு வெற்றி
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எல்லா புகழும் உங்களுக்கே
சூப்பர் சார்.. எல்லா புகழும் உங்களுக்கே சூப்பர் சார்.. எல்லா புகழும் உங்களுக்கே என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
உங்களுக்கு கிடைத்த வெற்றி
தமிழுக்கு கிடைத்த வெற்றி.... தமிழனுக்கு கிடைத்த வெற்றி... உங்களுக்கு கிடைத்த வெற்றி... என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











