அட, என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: ஒரு நடிகரின் குமுறல்
மும்பை: நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று நடிகர் ஒருவரையும் அழைத்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் விவேக் தஹியா. அவரின் மனைவி பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா த்ரிபாதி. தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான விவேக் தான் நடிக்க வந்த புதிதில் போராடியது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விவேக் கூறியிருப்பதாவது,

படுக்கை
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது அனைத்து இடங்களிலும் உள்ளது. அதை எதிர்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. நான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என் கொள்கைகளின்படி நடக்க முடிவு செய்தேன்.

சந்திப்பு
நடிக்க வந்துவிட்டால் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை கொடுத்து அவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் நம்மை தனியாக அழைப்பார்கள். நம் திறமையை பொறுத்து வாய்ப்புகள் கிடைக்கும்.

பணம்
ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என்னை தன் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். நான் அங்கு சென்றபோது நடிப்பு பின்னணி இல்லாததால் நீ தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்றார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பணம் கொடுக்குமாறு கூறினார். நான் பணம் தர மறுத்தேன்.

விவேக்
நான் நடிப்பு வாய்ப்புக்காக பணம் கொடுக்க மறுத்த உடன் அந்த நபர் சிலரை சில வகையில் திருப்திபடுத்த வேண்டும் என்றார். அதாவது படுக்கைக்கு செல்லுமாறு கூறினார். இது போன்ற கேவலமான காரியங்களை நான் செய்ய மாட்டேன் என்றேன் என விவேக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











