எழுமின் படத்தில் விவேக் ஜோடியாக நடிக்கும் தேவயானி
எழுமின் திரைப்படத்தின் மூலம் நடிகர் விவேக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தேவயானி.
சென்னை: எழுமின் திரைப்படத்தில் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் விவேக். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை தேவயானி. படபூஜை தினத்தன்றே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலக்காட்டு மாதவன் படத்திற்குப் பிறகு எழுமின் என்ற படத்தில் ஹீரோவாக விவேக் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் பல குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

பிரபல நாயகி தேவயானி
ஒரு காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இன்றைக்கும் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜீத்துக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர்.

டிவி சீரியல்களில் ஹீரோயின்
அதன் பிறகு இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் செட்டிலானார். திருமணத்திற்குப் பின் டிவி சீரியல்களில் பல ஆண்டுகள் நடித்த தேவயானி சினிமாவில் அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வந்தார்.
திருமதி தமிழ்
கணவர் ராஜகுமாரனின் இயக்கத்தில் வெளியான திருமதி தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்த தேவயானி நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விவேக் ஜோடியாக எழுமின் படத்தில் கதாநாயகியாகியுள்ளார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
எழுமின் படத்தை உரு படத்தின் தயாரிப்பாளரான வி.பி.விஜி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவையும், கார்த்திக் ராம் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. படபூஜை தினத்தன்றே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











