For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வயிறு வலிக்க சிரிக்க வைத்த … சிந்தனையாளன் விவேக்கின் ஸ்பெஷல் காமெடி சில !

  |

  சென்னை : வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்னு சொல்லுவாங்க அப்படி நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்தவரை நோய் கொண்டு போய் தீராத உயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  நடிகர் விவேக் பற்றி அறியாத சில உண்மைகள் | RIP Vivek, Vivek Biography

  மன்னிச்சுடுங்க...அடுத்தமுறை வரேன்...கண் கலங்க வைக்கும் விவேக்கின் கடைசி வீடியோ

  துன்பம் மறந்த சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல், நம்மை சிந்திக்க வைத்தவும் வைத்தார் விவேக்.

  அவரின் எவர்கிரீன் காமெடிகளின் சில தொகுப்புக்கள் உங்களுக்காக...

  சிறந்த நடிகருக்கான விருது

  சிறந்த நடிகருக்கான விருது

  பார்த்திபன் கனவு படத்தில் வேலைவெட்டி இல்லாத கணவர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து இருப்பார். இந்த படத்தில் ஒரு காட்சியில் விவேக் படம் வரைத்துக் கொண்டு இருப்பார். இதைப்பார்த்த அவரது மனைவி இவ்வளவு அழகா படம் வரைறீங்களே பார்க்க பிச்சைக்காரரு மாதிரியே இருக்கு என்று கூற, ஆமாம் உங்க அப்பா போட்டோவை மாடலாவேச்சித்தான் வரைத்தேன் என்று கூற அந்த இடத்தில் காமெடி பட்டையை கிளப்பும். இந்த படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது கிடைத்தது

  காக்கா பிரியாணி

  காக்கா பிரியாணி

  ரன் படத்தில் மாதவனைத் தேடி சென்னை வரும் விவேக் காக்கா பிரியாணி சாப்பிடும் காட்சியில், வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருப்பார். என்னய்யாகால் ரொம்ப சூம்பிப்போய் இருக்கு. போலியோ அட்டாக் ஆன கோழியா நீதர்ற அஞ்சு ரூபாய்க்குயானைக்காலையாவைப்பான் என்ற காட்சியிலும், மேலும், சாதா காக்கவா சொன்னா அண்டங்காகாக்கு கோவம் வருதுபாரு என்று அவரது அப்பாவை கலாய்க்கும் காட்சியில் சிரிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது இந்த படம் வெற்றிக்கு இவரின் காமெடி ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.

  யானை விட்டைய போடும்

  யானை விட்டைய போடும்

  விக்ரம், த்ரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தில் கோவில் யானைக்கு பட்டைப்போடுவதா ,நாமம் போடுவதா என்ற பஞ்சாயத்து நடக்க இடையில் விவேக் புகுந்து , பட்டைப்போடுவதா நமத்தைப் போடுவதா பேசுரேலே, அந்த யானைக்கு ஒரு சட்டைபோடனும்னு தோணுச்சா என்ற காட்சியில் சிரித்து சிரித்து வயிறு வலித்து விடுகிறது. பட்டைய போடுவேலோ.. நாமத்தை போடுவேலோ.. யானை இப்போ விட்டையா போடப்போகுதுனு நக்கலடித்து கலாய்த்து இருப்பார்.

  எலுமிச்சைப்பழக் காமெடி

  எலுமிச்சைப்பழக் காமெடி

  மின்னலே படத்தில் பைக் விபத்தில் சிக்கும் விவேக்,டேய் எலுமிச்சை பழத்தை எதுக்குடா லாரி முன்னால தொ தொங்கவிட்டிருக்கீங்க.. லாரி நல்லா ஓடணும்னு ஓனர் தொங்கவிட்டிருக்கான். அடப்பாவி, உள்ளுக்குள்ள எழுநூத்தம்பது ஸ்போர் பார்ட்ஸ் இருக்கு. அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஓடப்போகுது என்ற மூடப்பழக்க வழக்கத்தை நைசாக சொல்லி கெத்துக்காட்டி இருப்பார்.

  ரெட்டி பெண்ணா தூக்குறோம்

  ரெட்டி பெண்ணா தூக்குறோம்

  படிக்காதவன் படத்தில் அசால்டு ஆறுமுகமாக வரும் விவேகின் ஹேர் ஸ்டைல், நடை , உடை பாவனை என பார்க்கும் போதே சிரிப்பு பொத்துக்கிட்டு வரும். இந்த படத்தில் ரயில் நிலையகாட்சியில் நான் பயங்கரமான ரௌடி என் ஆவேசம் அடங்குறதுக்குள்ள ரெட்டி வீட்டுக்குப்போயி அங்கு ஒரு கேரள கதக்களி ஆடி ரெட்டி பெண்ணா தூக்குறோம் என்ற சீன் கவலையை மறந்து சிரிக்கவைக்கும்

  என்றும் நீங்காமல் ஒலிக்கும்

  என்றும் நீங்காமல் ஒலிக்கும்

  கவலை மறக்க விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சின்னக்கலைவாணர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், உங்களின் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் எங்களிடம் என்றும் நீங்காது சிரிப்பலையாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  English summary
  Vivek Evergreen comedy Dialogues
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X