சார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...!
சென்னை: தனுஷ் அவர்களுக்கு ரொம்ப பிடித்த காமெடியன் நான்.அவர் படங்கள் எல்லாவற்றிலும் என்னை சிறப்பாகவே பயன்படுத்தி இருப்பார். சில மேஜிக் டச் செய்து காட்சிகளில் காமெடியை கூட்டிடுவார். அதை சொன்னால் நீண்டு கொண்டே போகும்.
இது நடிகர் விவேக் பதிவிட்டிருக்கும் ட்வீட். எப்போதுமே நடிகர் தனுஷுக்கும், நடிகர் விவேக்குக்கு நகைச்சுவை கெமிஸ்ட்ரி ரொம்பவே வொர்க் -அவுட் ஆகி இருக்கும்.

படிக்காதவன், உத்தம புத்திரன், வேலை இல்லா பட்டதாரி, மாப்பிள்ளைன்னு நிறைய படங்களில் இரண்டு பெரும் சேர்ந்து கலக்கி இருப்பாங்க. அதுல மாப்பிள்ளை படத்துல விவேக் பேசிய பாஷையே நம்மை சிரிக்க வைக்கும்... டேய் சர்வண்ணா.. மற்க்க முட்யலடா!
உத்தம புத்திரன் படத்துல விவேக்கை தனுஷ் முழு காமெடி பீஸா மாத்தி, அவரையே கதி கலங்க வச்சு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.
நகைச்சுவையில் கவுன்ட்டர் டயலாக் மட்டும் இல்லை, உடல் மொழி, முக பாவனையில் கவுன்ட்டர் கொடுக்கணும்னு அண்மை காலத்துல உணர்த்தினவங்க விவேக்கும், தனுஷும்னு சொல்லலாம்.
வேலையில்லா பட்டதாரி படத்துல முதலில் அமலா பால் தனுஷின் மொட்டை மாடி குடிசைக்கு வந்து விவேக்கை வெளியே அனுப்பிட்டு சாப்பிட ஸ்பெஷல்னு குடுத்துட்டு போகும்.
உடனே தனுஷுக்கு காட்ராக்ட் வாங்கித் தந்த பொண்ணு வரும். அப்போதும் விவேக்கை வெளியே அனுப்பிடுவார் தனுஷ். நானே என் கையால செய்ததுன்னு பொய் சொல்லி அமலா பால் கொடுத்ததை சாப்பிட சொல்வார்.
விவேக் அப்போது பல மைண்ட் வாய்ஸ் பேசுவார். ரெண்டு பெரும் போன பிறகு வந்து கேட்பார், இந்த பொண்ணுதான் அதுவா, இல்லை அந்த பொண்ணுதான் அதுவா. இல்லை ரெண்டுமே அது இதுவான்னு கேட்பார்.
நடிகர் விவேக் பொதுவா எல்லா நடிகர்கள் கூடவும் செட்டாக கூடியவர்தான். இருந்தாலும் தனுஷ் விவேக்கை மாட்டிவிட்டு சில்மிஷம் செய்வதை பார்ப்பது செம காமெடியா இருக்கும்.


Click it and Unblock the Notifications











