இன்டர்நெட், திருட்டு விசிடியில் பார்த்துவிட்டு அஞ்சானை குறைசொல்வதா?: விவேக்

By Siva

சென்னை: அஞ்சான் படத்தை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். மேலும் யாரும் படத்தை பார்க்க தியேட்டர் வரை சென்று கஷ்டப்பட வேண்டாம் என்று நக்கல் அடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஞ்சான்

அஞ்சான் பார்த்தேன். தற்போது ஸ்லீக்காகவும், நன்றாகவும் உள்ளது. காரணம் இல்லாமல் ஒரு படத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம். கடின உழைப்பு பாராட்டப்பட வேண்டும்.

விமர்சனம்

கலை படைப்புகளை விமர்சனம் செய்யலாம். அதிலும் ஒரு கண்ணியம் வேண்டும். அடுத்தவரை போய் பார்க்கவிடாமல் செய்வது ஆரோக்யமற்ற செயல் நண்பர்களே!

திருட்டு விசிடி

ஆணவத்துடன் ஒரு படத்தை விமர்சிப்பவர்கள் அதை இணையதளத்திலோ, திருட்டி விசிடியிலோ பார்த்திருப்பார்கள். அப்படி பார்ப்பதும் அடுத்தவர்களை படத்தை பார்க்கவிடாமல் தடுப்பதும் குற்றமாகும்.

கருத்து

மக்களின் கருத்துகள் தான் இறுதி தீர்ப்பு. அதற்கு தலை வணங்க வேண்டும். நாம் கருத்து தெரிவிக்கலாம் ஆனால் அது வெறுப்பாக இருக்க வேண்டியது இல்லை. அனைவருக்கும் நன்றி என்று விவேக் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X