மன்னிச்சுடுங்க...அடுத்தமுறை வரேன்...கண் கலங்க வைக்கும் விவேக்கின் கடைசி வீடியோ

சென்னை : இதய அடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Recommended Video

Actor Vivekh Last Video | Vaccination, Chennai Government Hospital | RIP Vivekh | Filmibeat Tamil

விவேக்கின் மறைவு தொடர்பாக இதுவரை இரங்கல் தெரிவித்த அனைவருமே அவரது நடிப்பை எந்த அளவிற்கு பாராட்டினார்களோ, அதே அளவிற்கு விவேக்கின் சமூக சேவையையும் பாராட்டி உள்ளனர். விவேக்கின் ரசிகர்கள் சிலர், இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய விவேக்

விழிப்புணர்வை ஏற்படுத்திய விவேக்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவரான விவேக், தினம் தினம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். குறிப்பாக மரம் நடுதல், தண்ணீர் சிக்கனம், புவி வெப்பமயமாதலை தடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து தனது வீடியோக்கள் மூலம் வலியுறுத்தி வந்தார்.

மன்னிப்பு கேட்ட விவேக்

மன்னிப்பு கேட்ட விவேக்

இந்நிலையில் தான் கடைசியாக பேசி வெளியிட்ட வீடியோவில், திருப்பத்தூர் Sacred Heart College மாணவர்களிடம் விவேக் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக பேசிய வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், தான் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போனதற்கு தான் மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கலங்க வைத்த கடைசி வீடியோ

அந்த வீடியோவில், உங்கள் கல்லூரிக்கு நேரில் வந்து, 5000 மரக்கன்றுகளை நடுவதாக வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். கடைசி நிமிடத்தில் அவர்கள் அனுமதி வழங்க மறுத்ததால் என்னால் வர முடியாமல் போய் விட்டது.

நிச்சயம் வருவேன்

நிச்சயம் வருவேன்

கொரோனா இரண்டாம் அலை நிலைமை சரியானதும் அடுத்த முறை நிச்சயம் வந்து, மரக்கன்றுகளை நடுவேன். தற்போது நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என விவேக் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீர் விடும் ரசிகர்கள்

கண்ணீர் விடும் ரசிகர்கள்

தற்போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் விவேக் மரணமடைந்து விட்டதால், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கண்விட்டு, அழுது வருகின்றனர். விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று, உணவு என்ற அமைப்பினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X