இளையராஜாவுக்கு விவேக் கொடுத்த சிறப்பு பரிசு...வைரலாகும் போட்டோ
சென்னை : பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இளையராஜா சமீபத்தில் புதிய ஸ்டூடியோ ஒன்றை துவக்கினார். அதில் கடந்த சில மாதங்களாக தனது ரெக்கார்டிங் வேலைகளை இளையராஜா செய்து வருகிறார்.

இந்த புதிய ஸ்டூடியோவின் துவக்க விழாவில் டைரக்டர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய ஸ்டூடியோவில் முதல் படமாக விஜயசேதுபதி படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து சென்றார். தற்போது நடிகர் விவேக், நடிகர் செல் முருகனுடன் சென்று இளையராஜாவை சந்தித்துள்ளார்.
இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் எதிர்பாராமல் நடந்த இந்த சந்திப்பின் போது, தத்ரூபமாக உருவாக்கப்பட்ட புத்தர் படத்தை, விவேக் பரிசாக இளையராஜாவிற்கு வழங்கி உள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











