மலையாளத்தில் மோகன்லால் படத்தில் அறிமுகமாகும் விவேக் ஓப்ராய்.. பிரித்விராஜ் இயக்கம்!
நடிகர் பிரித்விராஜ், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்துத் தயாரிக்கும் படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் அறிமுகமாகிறார்.
கொச்சின்: நடிகர் பிரித்விராஜ், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்துத் தயாரிக்கும் படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் அறிமுகமாகிறார்.
மலையாள திரைப்படத்தின் நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக முதல் முதலில் இயக்கவிருக்கும் படம் லூசிபர். இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு மிகவும் பொருத்தமான ஸ்டைலிஷான வில்லன் தேவைப்பட்டதால், இயக்குநர் பிரித்விராஜ் பல தேடல்களுக்குப் பின்னால், இந்தி நடிகர் விவேக் ஓப்ராயை அந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனால் "லூசிபர்" படம் மூலம் முதல் முதலாக மலையாளத்தில் அறிமுகமாகிறார் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய். மேலும் இதைப் பற்றி அவர் கூறுகையில், தான் மலையாளத்தில் அறிமுகம் ஆவது என்றால் அது மோகன்லால் படத்தில் தான் நடக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், அது இப்போது நிறைவேறியுள்ளது, தனக்கு இது மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறினார்.
மேலும் விவேக் ஓப்ராயுடன் நடிகர் மோகன்லால் சுமார் 16 வருடங்களுக்கு முன்பு, ஹிந்தியில் அவர் நாயகனாக அறிமுகமான, "கம்பெனி" என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











