இளம் நரேந்திர மோடியாக நடிக்க விவேக் ஓபராய்க்கு அழைப்பு
மும்பை: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் இளம் வயது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கிறார் இயக்குனர் மிதேஷ் பட்டேல்.
இளம் வயது நரேந்திரமோடியாக நடிக்க பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கு அழைப்பு விடுத்துள்ளார் மிதேஷ் பட்டேல்.

மோடியின் ரசிகர்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிதேஷ் பட்டேல் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். இவர் மோடியின் ரசிகராம்.

டீக்கடை டூ முதல்வர்
சாதாரண டீக்கடை நடத்தி பின்னர் அரசியலுக்கு வந்து, படிப்படியாக முன்னேறி மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தவர் மோடி. அவரது வளர்ச்சியால் ஈர்க்கப்பட்ட மிதேஷ், அவரது வாழ்க்கை வரலாறை படம் எடுக்க திட்டமிட்டார்.

மோடியின் அனுமதி
இதற்காக நரேந்திர மோடியிடம் அனுமதியும் பெற்றுள்ள மிதேஷ், தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

விவேக் ஓபராய்
இந்தப் படத்தில் இளவயது நரேந்திர மோடியின் வேடத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை இயக்குனர் அணுகியுள்ளார்.

இன்னும் முடிவு செய்யலை
ஷில்லாங்கில் நடந்த இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற விவேக் ஓபராயிடம் வந்திருந்தார். அப்போது நரேந்திர மோடி படத்தில் நடிக்க வந்த அழைப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த விவேக் ஓபராய், "இந்தப் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், இதுபற்றி இன்னும் எனது முடிவை தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











