»   »  'விவேக் ஓபராய்க்கு பால்கே விருதா... இது தெரிஞ்சா பால்கே ஆத்மாவே தற்கொலை செய்து கொள்ளுமே!'

'விவேக் ஓபராய்க்கு பால்கே விருதா... இது தெரிஞ்சா பால்கே ஆத்மாவே தற்கொலை செய்து கொள்ளுமே!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கு 2015 ம் ஆண்டுக்கான பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து ஏகத்துக்கும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்படுவது. இது தவிர, தாதாசாகேப் பால்கே அகாடமி மூலமும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது தனியார் அமைப்பு தரும் விருதாகும்.

கடந்த ஆண்டுக்கான மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது இந்தி நடிகர் சசி கபூருக்கு வழங்கப்பட்டது. தாதா சாகேப் பால்கே அகாடமி விருது ஃபர்ஹான் அக்தர், ஜூஹி சாவ்லா போன்றோருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது யாருக்கு எனத் தெரியவில்லை. இந்த நிலையில் விவேக் ஓபராய்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக செய்தி பரவ, இந்தியத் திரையுலகமே கொந்தளித்துவிட்டது.

ஒருவேளை இந்த விருது தாதாசாகேப் பால்கே அகாடமியால் வழங்கப்படவிருக்கும் விருதாகவும் இருக்கலாம்.

இது தெரியாமல் சமூக வலைத்தளங்களில் வந்து விழுந்துள்ள கமெண்ட்களைப் படித்தால் நிச்சயம் இந்த விருதே வேண்டாம் என்று விவேக் ஓபராய் ஓடினாலும் ஆச்சர்யமில்லை.

சில கிண்டல்கள்..

எதுவும் நடக்கும்..

எதுவும் நடக்கும்..

விவேக் ஓபராய்க்கு பால்கே விருது செய்தியைப் படித்த பிறகு, இந்தியாவில் எதுவும் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஆத்மா தற்கொலை

ஆத்மா தற்கொலை

விவேக் ஓபராய்க்கு பால்கே விருதா... இதைப் படித்தால் பால்கேவின் ஆத்மா தன் நாக்கைக் கடித்தபடி தற்கொலை செய்து கொள்ளும்..

கமால் கானுக்கு ஆஸ்கர்

கமால் கானுக்கு ஆஸ்கர்

விவேக் ஓபராய்க்கு பால்கே விருது தருவது, கமால் ஆர் கானுக்கு ஆஸ்கர் தருவதற்கு சமம்.

நாட்டுக்கு நல்லதில்ல

நாட்டுக்கு நல்லதில்ல

விவேக் ஓபராய்க்கு பால்கே விருது.. ராகுல் காந்தி நாடு திரும்பறது... ரெண்டுமே நாட்டுக்கு நல்லதில்லையே!

ராஜ்தீப் சர்தேசாய்

ராஜ்தீப் சர்தேசாய்

டிவி செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய் அடித்திருக்கும் கமெண்ட் இது:

ரொம்ப நொந்துபோய் வாழ்த்துறேன் விவேக். எந்தப் படத்திலும் நடிக்காம இருக்கிறதுக்காக ஒருவேளை இந்த பால்கே விருதை உங்களுக்குத் தராங்களா.. அல்லது மோடியை பர்சனலா தெரியுமோ!

நம்பிக்கை

நம்பிக்கை

விவேக் ஓபராய்க்கு பால்கே விருது கொடுத்திருப்பது, அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, துஷார் கபூர், பாபி தியோலுக்கெல்லாம் ரொம்ப நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்!

ஓபராய்க்கு பால்கேன்னா, ஹனி சிங்குக்கு?

ஓபராய்க்கு பால்கேன்னா, ஹனி சிங்குக்கு?

விவேக் ஓபராய்க்கே பால்கே விருது கொடுக்கும்போது, ஹனி சிங்குக்கு கிராமி விருது கொடுக்கும்படி நான் கேட்பேன்.

-இப்படி நீள்கின்றன அந்த கமெண்ட்கள்.

English summary
We don't remember the last time Vivek Oberoi was seen on the silver screen but the near-invisible actor has hit the headlines after the news of him being conferred with Dada Saheb Phalke Pride Award 2015 started doing the rounds on micro-blogging website Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil