ரீல் மோடி மீது கொலவெறியில் அபிஷேக் பச்சன்: ஃப்ரீயா விடச் சொன்ன ஐஸ்வர்யா ராய்
மும்பை: விவேக் ஓபராய் மீது செம கடுப்பில் இருந்த அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் தான் சமாதானம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய் ட்விட்டரில் ஒரு மீம்ஸ் போட்டார். தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராயை வைத்து அந்த மீம்ஸ் போட்டிருந்தார்.

அதை பார்த்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் அவரை விளாசினார்கள். இதையடுத்து அந்த ட்வீட்டை நீக்கினார். விவேக் ஓபராயின் ட்வீட் குறித்து பிரான்ஸில் இருந்த ஐஸ்வர்யா ராய்க்கு தகவல் கிடைத்துள்ளது.
விவேக் ஓபராயின் கீழ்த்தரமான ட்வீட்டால் ஐஸ்வர்யா ராய் அதிர்ச்சி அடைந்தபோதிலும் அதை கண்டும் காணாமலும் இருக்க முடிவு செய்தார். ஆனால் ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சன் விவேக்கிற்கு தக்க பதிலடி கொடுக்க விரும்பினார்.
அதற்கு ஐஸ்வர்யாவோ, விவேக் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவே இப்படி செய்துள்ளார். நீங்கள் அவருக்கு பதிலடி கொடுத்து அவர் நினைத்ததை நடக்க வைத்துவிடாதீர்கள் என்று அபிஷேக் பச்சனை சமாதானம் செய்துள்ளார்.
ஏற்கனவே விவேக் ஓபராய் பி.எம். மோடி படம் குறித்து ஓவராக பேசியது யாருக்கும் பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராயை கலாய்த்து மீம்ஸ் போட்டு அவர் தலையில் அவரே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்.
ஐஸ்வர்யா ராயை கலாய்த்து மீம்ஸ் போட்டதன் மூலம் விவேக் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பது தெரிகிறது என்று பாலிவுட் நடிகைகள் அவரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய் கண்டுகொள்ளாவிட்டாலும் அவரின் சகாக்கள் விவேக்கை வறுத்தெடுத்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











