போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராகவில்லை.. பிரபல நடிகர் மனைவிக்கு மீண்டும் சம்மன்!

By

மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாத பிரபல நடிகர் மனைவிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கன்னட சினிமா துறையில் போதை பொருள் விவகாரம் பரபரப்பாகி வருகிறது.

போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 பேர் கைது

15 பேர் கைது

இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்த வழக்கில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தலைமறைவு ஆல்வா

தலைமறைவு ஆல்வா

இந்த விவகாரத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவர், போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

அவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். ஆதித்யா ஆல்வாவின் சகோதரி பிரியங்கா ஆல்வா, பிரபல நடிகர் விவேக் ஓபராயின் மனைவி. இவர், தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்தவர். விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா பதுங்கி இருக்கலாம் என்பதால், மும்பையில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

பிரியங்கா ஆல்வா

பிரியங்கா ஆல்வா

அவர் அங்கு இல்லை. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஆதித்யாவை காப்பாற்ற விவேக் ஓபராய், அவர் மனைவி பிரியங்கா ஆல்வா முயன்றது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிரியங்கா ஆல்வாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

கால அவகாசம்

கால அவகாசம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று மதியத்திற்குள் ஆஜராக, சம்மனில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவர், போலீசாரிடம் கால அவகாசம் எதுவும் கேட்கவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X