»   »  விவேக் பேச்சு, ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையால்ல இருக்கு!

விவேக் பேச்சு, ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையால்ல இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானின் டியூப்லைட் படம் பாகுபலி 2 பட சாதனையை முறியடிக்க வேண்டும் என விரும்புவதாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கும், சல்மான் கானுக்கும் ஆகாது. காரணம் நடிகை ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை பிரிந்த பிறகு விவேக் ஓபராயை காதலித்தார்.


இதனால் சல்மானுக்கும், விவேக்கிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.


டியூப்லைட்

டியூப்லைட்

டியூப்லைட் பாகுபலி 2 படத்தின் சாதனைகளை முறியடித்து சூப்பர் ஹிட் படமாக வேண்டும் என விரும்புகிறேன். இந்தி சினிமாவை உலக அளவில் பெருமைபடுத்தச் செய்யும் சக்தி டியூப்லைட்டுக்கு உள்ளது என்கிறார் விவேக்.


பாலிவுட்

பாலிவுட்

விவேக் ஓபராயும், சல்மான் கானும் எப்படி என்று பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது விவேக் சல்மான் படம் வெற்றியடைய வாழ்த்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


காதல் கதை

காதல் கதை

நான் நல்ல காதல் கதைக்காக காத்திருக்கிறேன். என் வயதிற்கு ஏற்ற மாதிரியான கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட படம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என விவேக் தெரிவித்துள்ளார்.


விவேகம்

விவேகம்

விவேக் ஓபராய் நடித்துள்ள பேங்க் சோர் இந்தி படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. விவேக் அஜீத்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Vivek Oberoi says he hopes Salman Khan's Tubelight breaks the records set by Baahubali 2: The Conclusion. We all know that Vivek Oberoi and Salman Khan have been not on talking terms and the reason is obvious - Aishwarya Rai Bachchan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil