பணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்

By Siva

பாலிவுட் நடிகர்கள் விவேக் ஓபராய், சக்தி கபூர், நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோர் பணத்திற்காக அரசியல் கட்சிக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் தேட ஒப்புக் கொண்டது தெரிய வந்துள்ளது.

கோப்ராபோஸ்ட் ஆன்லைன் செய்தி நிறுவனம் நடத்திய ஆபரேஷன் கரோகியில் 36 பாலிவுட் பிரபலங்கள் சிக்கியுள்ளனர். பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் தேட அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

அப்படி ஒப்புக் கொண்டவர்களில் சிலர் கோடிக் கணக்கில் பணம் கேட்டது தெரிய வந்துள்ளது.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

பணத்திற்காக அரசியல் கட்சிக்கு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஒப்புக் கொண்டது பலரையும் வியக்க வைத்துள்ளது. அவரிடம் இல்லாத பணமா, இதில் இப்படி ஒன்று தேவையா என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

கவர்ச்சி நடிகைகளான சன்னி லியோன், பூனம் பாண்டே, மீ டூ புகாரில் சிக்கிய பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா ஆகியோரும் பணத்திற்காக இறங்கி வந்துள்ளனர்.

சோனு சூத்

சோனு சூத்

நடிகை மஹிமா சவுத்ரியோ கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் பாஜகவுக்கு பதில் காங்கிரஸுக்கு விளம்பரம் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். மார்க்கெட் இல்லாத நடிகை அமீஷா பட்டேலும் இந்த பட்டியலில் உள்ளார்.

ஜாக்கி ஷ்ராஃப்

ஜாக்கி ஷ்ராஃப்

பாடகர்கள் கைலாஷ் கேர், மிகா சிங், பாபா சேகல், நடிகர்கள் ஜாக்கி ஷ்ராஃப், சக்தி கபூர், சோனு சூத், ஸ்ரேயாஸ் தல்பதே, புனீத் இஸ்ஸார், சுரேந்திர பால், பங்கஜ் தீர், அவரின் மகன் நிகிதின் தீர், நடிகை டிஸ்கா சோப்ரா, தீப்ஷிகா நாக்பல் மேலும் அகிலேந்திர மிஸ்ரா, ரோஹித் ராய், ராகுல் பட், சலிம் ஜயிதி, ராக்கி சாவந்த், அமன் வர்மா, ஹிதேன் தேஜ்வானி, அவரின் மனைவி கவுரி பிரதான், எவ்லின் ஷர்மா, மினிஷா லம்பா, கொயினா மித்ரா, ராஜு ஸ்ரீவஸ்தவா, சுனில் பால், ராஜ்பல் யாதவ், உபசனா சிங், க்ருஷ்ணா அபிஷேக், விஜய் ஈஷ்வர்லால் பவார், கணேஷ் ஆச்சார்யா, சம்பவனா சேத் ஆகியோர் பணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதம் தெரிவித்தவர்கள் ஆவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X