ரோஹித் சர்மாவை அபிநந்தனாக மாற்றி பாகிஸ்தானை கலாய்த்த 'ரீல்' மோடி

By Siva

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் போட்ட 2 ட்வீட்டுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று இங்கிலாந்தில் நடந்தது. மழை பெய்து போட்டி ரத்தாகிவிடக் கூடாது கடவுளே என்று பலரும் வேண்டிக் கொண்டிருந்தனர்.

போட்டிக்கு இடையே மழை பெய்தபோதிலும் அது ரத்தாகவில்லை. இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கோஹ்லி அன்ட் கோ வெற்றி பெற்றது.

ரோஹித்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இரண்டு ட்வீட்டுகள் போட்டார். இரண்டுமே நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்திய அணியை வாழ்த்திய விவேக் ஓபராய் நேற்றைய போட்டியில் 140 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ரோஹித் சர்மா அபிநந்தன் போன்று மீசை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கிண்டல்

கிண்டல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு முன்பு இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனை வைத்து கலாய்த்து வீடியோ ஒன்றை அண்டை நாட்டவர் வெளியிட்டனர். அதை பார்த்து இந்தியர்கள் கோபம் அடைந்த நிலையில் நேற்று கோஹ்லி தலைமையிலான அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சி. இந்நிலையில் விவேக் ஓபராய் போட்ட ட்வீட் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

மழை

பாகிஸ்தான் விவசாயிகள் இங்கிலாந்தில் இன்று மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள் #WorldCupEffect #IndiaVsPakistan #CW19 #IndvsPak #CCWorldCup2019 என்று ட்வீட் செய்தார் விவேக் ஓபராய். நேற்று மழை பெய்தும் போட்டி ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

முன்னதாக லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் பச்சனின் புகைப்படங்கள் கொண்ட மீம்ஸ் வெளியிட்டு பிரபலங்கள், ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் விவேக் ஓபராய். இம்முறை நல்லவேளையாக யாரையும் வம்புக்கு இழுக்காமல் ட்வீட் செய்துள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X