பழைய பாசம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரபல ஹீரோ பிரார்த்தனை.. பரபரப்பாகும் ட்வீட்!
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக, பிரபல ஹீரோ பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை எடுத்தாலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அமிதாப், அபிஷேக்
மும்பையில், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்
இதையடுத்து அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உட்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களும் ட்விட் செய்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் போனில் பேசி, அவரிடம் நலம் விசாரித்தார்.

நடிகர் விவேக் ஓபராய்
இந்நிலையில் அமிதாப், அபிஷேக் பச்சன் விரைவில் குணமடைய தனியாக ட்வீட் செய்த பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய் குணமடைவதற்கு தனியாக ட்வீட் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் வந்துள்ள செய்தியை டேக் செய்து, விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விவேக் ஓபராயும் ஐஸ்வர்யா ராயும் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











