திகிலூட்டும் காடு.. பதறி ஓடும் ஹீரோ.. உண்மை சம்பவத்தை வைத்து உருவான 'பருந்தாகுது ஊர் குருவி'!

சென்னை : தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி உள்ள பருந்தாகுது ஊர்க்குருவி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நிஷாந்த் ரூஸோ, காயத்திரி ஐயர், ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.

விவேக் பிரசன்னா

விவேக் பிரசன்னா

விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் வில்லனின் கூட்டாளியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார் விவேக் பிரசன்னா. அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து இறைவி, பீச்சாங்கை, விக்ரம் வேதா, மேயாத மான், சூரரைப் போற்று போன்ற படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக வந்த விவேக் பிரசன்னா ''நாம ஜெயிச்சிட்டோம் மாறா'' என்று பேசிய வசனம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

பருந்தாகுது ஊர்க்குருவி

பருந்தாகுது ஊர்க்குருவி

தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்த விவேக் பிரசன்னா, பருந்தாகுது ஊர்க்குருவி என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவராக இருக்கிறார் விவேக் பிரசன்னா. இவருக்கு ஒரு இளைஞன் உதவி செய்கிறான். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. எதிரிகளிடமிருந்து அவர்கள் தப்பினார்களா? சிக்கினார்களா? என்பதை திகிலூட்டும் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ளது.

திகிலூட்டும் காடு

திகிலூட்டும் காடு

இப்படத்தில் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. டிரைலரில் பதைபதைக்கும் குரல், பதற்றத்துடன் நடுகாட்டில் மூச்சிறைக்க ஓடுகிறார் விவேக் பிரசன்னா. மிரட்டலான இசை, திகிலூட்டும் காடு என டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளது.

முதல் பாடல்

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானை கூட்டம் பாடல் அண்மையில் வெளியானது. இசையமைப்பாளர் ரஞ்சித் உண்ணி இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை, ராகுல் மற்றும் நம்பியாரும் இணைந்து பாடியுள்ளனர். படத்தின் அறிமுகத்தைத் தரும் வகையில் இந்த பாடல் இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X