78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதிச்சடங்கு… தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி !
சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்த தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Recommended Video
78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தார்
நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதை
விவேக்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மாயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.

தமிழக அரசுக்கு நன்றி
இந்நிலையில், விவேக் அவர்களின் கலை மற்றும் சமூக சேவைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மனமார்ந்த நன்றி
அந்த அறிக்கையில், காலமான கலைமாமணி பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் கலை மற்றும் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதிச்சடங்கு நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications