கொட்டாச்சிக்காக விவேக் அனுப்பிய மனதை உருக்கும் கடைசி குரல் பதிவு
சென்னை : நடிகரும் சமூக சேவகருமான விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 17 ம் தேதி உயிரிழந்தார். கடந்த 35 ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை சிரிக்க வைத்த விவேக்கின் மறைவு அவரது ரசிகர்களையும், சினிமா உலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விவேக் மரணத்திற்கு பிறகு நடிகர், நடிகைகள் பலர்அவருடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கொட்டாச்சியும் விவேக் தனக்கு அனுப்பிய குரல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விவேக்கின் கடைசி குரல் பதிவு
நடிகர் கொட்டாச்சி, விவேக்குடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்த குரல் பதிவு, 6 மாதங்களுக்கு முன் விவேக், கொட்டாச்சிக்கு அனுப்பி உள்ளார். இது தான் விவேக் தனக்கு அனுப்பிய கடைசி குரல் பதிவு என கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.

கொட்டாச்சியை பாராட்டிய விவேக்
அந்த குரல் பதிவில் விவேக் பேசுகையில், கொட்டாச்சி நடித்த முதல் குறும்படத்தை யூட்யூப்பில் நான் பார்த்தேன். மிகவும் உணர்ச்சிகரமாக கதை அது என்றும், கொட்டாச்சியின் நடிப்பையும் பாராட்டி உள்ளார். மேலும் உலகில் உள்ள ஒவ்வொருவருமே கொரோனாவால் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். விரைவில் இயற்கை கருணை காட்டி, சினிமா துறை உள்ளிட்ட ஒவ்வொருவரும் மீண்டு வர மனது வைக்கும் என நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிந்திக்க வைத்த லாக்டவுன்
இந்த குரல் பதிவின் ஹைலைட் என்னவென்றால், கோவிட் 19 லாக்டவுனில் வீட்டில் அடைபட்டு இருந்த போது, தனிமை என்னை சிந்திக்க வைத்தது. என்னுடன் பணியாற்றிய பழைய நடிகர்கள், நண்பர்களுக்காக விரைவில் ஒரு படம் எடுக்கலாம் என நினைக்கிறேன்.
Recommended Video

மானஸ்வியை நடிக்க வைக்க விருப்பம்
அதில் எனக்கு மிகவும் பிடித்த கொட்டாச்சியின் குடும்பம், குறிப்பாக உங்கள் மகளும், குழந்தை நட்சத்திரமுமான மானஸ்வியை நடிக்க வைக்க ஆசைப்படுகிறேன் என விவேக் கூறி உள்ளார். சினிமாவில் மிக குறைவாக வாய்ப்பு கிடைக்கும் தன்னுடன் எப்போதே நடித்த நண்பர்களுக்கு உதவி வேண்டும் என்ற விவேக்கின் கனிவான மனது, அதை கனிவாக தெரிவித்த விதம் இந்த குரல் பதிவு காட்டுவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications











