நான்தான் பாலா... சமஸ்கிருதத்தில் டப்பிங் பேசிய விவேக்
பகுத்தறிவு பேசும் பார்ப்பணராக சாமி படத்தில் நடித்து கலக்கிய விவேக், மீண்டும் அதே போன்றதொரு வேடத்தில் நடித்துள்ளார், நான்தான் பாலா படத்தில்.
ஆனால் இதில் காமெடியனாக அல்ல... கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இப்படத்தை இயக்கியிருப்பவர் கண்ணன். பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், தன் முதல் படத்துக்கு தலைப்பாக குருவின் பெயரையே வைத்திருக்கிறார்.

வெங்கட் க்ரிஷி இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.லாரன்ஸ் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அனைத்து விஷயங்களும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக, விவேக் முறையாக சமஸ்கிருதம் கற்றாராம். அது மட்டுமல்ல, டப்பிங்கில் சமஸ்கிருதத்தில் பேசி அசத்தினாராம்.
இப்படம் ஒரு முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக வந்துள்ளது.
வரும் 13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் நான்தான் பாலா, விவேக் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் படமாக அமையும் என்கிறார் தயாரிப்பாளர் லாரன்ஸ்.


Click it and Unblock the Notifications











