twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம்: விவேக் வேண்டுகோள்

    By Siva
    |

    Recommended Video

    பெண்களை சமயலறைக்கு போக சொன்ன விவேக் - வீடியோ

    சென்னை: அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம் என்று நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கோடை விடுமுறையில் பெண் பிள்ளைகள் தாயிடம் சமையல் கற்றுக் கொள்ளுமாறும், ஆண் பிள்ளைகள் தந்தை வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவர் குடும்பத்திற்காக எப்படி உழைக்கிறார் என்பதை பார்க்குமாறும் நடிகர் விவேக் ட்வீட்டினார்.

    இதை பார்த்த சிலர் அது என்ன பெண்கள் என்றால் சமையல் அறை தானா என்று விவேக்கை விளாசினர்.

    விவேக்

    தான் போட்ட ட்வீட்டால் சர்ச்சை கிளம்பியதை பார்த்த விவேக் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். தனது கருத்தை அனைத்து பெற்றோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார் விவேக்.

    மக்கள்

    என்னை பற்றி தெரிந்தவர்கள் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் ஓடிக் கொண்டே இருக்கும் ஆறு போன்றவன். சிலர் பூக்களை வீசுவார்கள், சிலர் கற்களை. ஆறு அதை எல்லாம் கண்டு கொள்ளாது. நான் அன்பை பரப்புவதில் பிசியாக உள்ளேன் என்று விவேக் ட்வீட்டியுள்ளார்.

    விடுமுறை

    தன்னை தவறாக புரிந்து கொண்டு அவசரப் பட்டு எதிர்மறை, மற்றும் கொச்சை விமர்சனம் செய்பவர்களையும் ஏற்பதாக விவேக் தெரிவித்துள்ளார்.

    சர்ச்சை

    இதன் பொருட்டு அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம். அவரவர் கருத்து அவரவர்க்கு. ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதமானவர்; அன்பு மயமானவர். நான் நேசிக்கும் மாணவச் செல்வங்களுக்கு என் மாலை வணக்கங்கள். ஏலே டோண்ட் ஒர்ரி; பீ ஹேப்பி!!!! என்கிறார் விவேக்.

    English summary
    Actor Vivek tweeted that, 'Truth alone triumphs.People know me tk me in the right sense. I m like a river keeps on flowing. Some throw flowers, some,pebbles! River never http://minds.it keeps moving. Bcoz every moment is a gift n I celebrate it. Sorry I m busy spreading love ❤️'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X