கமல் படத்தால் என் படம் நாசம்: விவேக்கை யாரும் திட்ட வேண்டாம்

By Siva

Recommended Video

கமலின் பாபநாசம் படத்தால் தான் தனது படம் நாசமானது- விவேக் பரபரப்பு புகார்

சென்னை: கமலின் பாபநாசம் படத்தால் தன் படம் நாசமானதாக விவேக் பேசியதை கேட்டு விமர்சனம் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் சேர்ந்து எடுத்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விவேக். படம் வரும் 19ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விவேக் பேசியது கமல் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

விவேக்

விவேக்

வெள்ளைப்பூக்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விவேக், பாபநாசத்தால் தன் படமான இவன் தான் பாலா நாசமாப் போனது என்றார். அவரின் இந்த பேச்சு கமல் ஹாஸன் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

கமல்

கமல்

வெள்ளைப் பூக்கள் பட ரிலீஸின்போது உங்களுக்கு பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக தேவையில்லாமல் பாபநாசம் படம் பற்றி பேசினீர்கள்?. கமல் படத்தால் தான் உங்களின் படம் நாசமானதாக்கும் என்று கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

பாபநாசம் பற்றி பேசிவிட்டு, நான் குறையாக சொல்லவில்லை, நடந்ததை தெரிவிக்கிறேன் என்றார் விவேக். ஆனால் அவர் கமல் பெயரை சொல்லி தன் படத்திற்கு விளம்பரம் தேடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் எவ்வளவோ பேசினார். ஆனால் அவர் பாபநாசத்தை விமர்சித்தது மட்டும் தான் மக்களுக்கு தெரிகிறது.

விளம்பரம்

விளம்பரம்

பட விழா மேடைகளில் ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்று பிரபல இயக்குநர் ஒருவரே தெரிவித்தார். அப்படி இருக்கும்போது விவேக் பேசியதில் குறை சொல்வது தவறு. அவர் ஏதோ தனது மனதில் ரொம்ப நாளாக இருந்ததை கொட்டிவிட்டார். கமல் படம் வராமல் இருந்திருந்தால் தன் படம் பெரிய அளவில் ஹிட்டாகியிருக்கும் என்று நினைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X