சிவனோட சிட்டிங்.. எமனோட கட்டிங் போட்டவர் ரஜினிகாந்த்.. பட்டைய கிளப்பிய விவேக்!

சென்னை: தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பஞ்ச் டயலாக் பேசி பட்டையை கிளப்பினார்.

நடிகர் விவேக் ரஜினியுடன் சேர்ந்து நடித்த சிவாஜி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விவேக்.

அப்போது பேசிய அவர் அண்ணாமலை படத்தில் ரஜினி பேசும் அசோக் இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ டயலாக்கை பேசினார். மேலும் பேசிய அவர், இந்த இசை விழாவின் நாயகன் அனிருத்.

நாடி நரம்பு இரத்தம்

நாடி நரம்பு இரத்தம்

பாட்ஷா படத்தில் ஒரு வசனம் இருக்கும். நாடி நரம்பு இரத்தம் எல்லாவற்றிலும் வெறி இருப்பவர்கள்தான் இப்படி செய்ய முடியும். அனிருத் அந்த மாதிரி ஒரு இசையை கொடுத்துள்ளார்.

காட்டு தர்பார்

காட்டு தர்பார்

இந்தியில் ஆமீர் கானுக்கு 100 கோடி வசூல் என்ற புதிய மார்கெட் உருவானது ஏ ஆர் முருகதாஸ் இயக்கியதால் தான். நாம் பெருமை கொள்ள வேண்டும். இது சாதாரண தர்பார் அல்ல காட்டு தர்பார்.

40 ஆண்டுகளாக..

40 ஆண்டுகளாக..

மூன்று முகத்தில் பார்த்த ரஜினியை விட பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் சொல்கிறார் நான் சூப்பர் ஸ்டார் இல்ல. ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்று. கடந்த 40 ஆண்டுகளாக அவர் மட்டுமே அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துள்ளார்.

யாரு நீங்க?

யாரு நீங்க?

அடிமட்டத்தில் இருப்பவன் மேல வரவேண்டும் என்றால் ரஜினியின் வசனங்கள் அந்த எனர்ஜி தரும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் ரஜினி நேரில் பார்த்த போது அடிபட்டவர் யார் நீ என்று கேட்டார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அப்போது நமக்கெல்லாம் எவ்வளவு கோவம் வந்துச்சு? ஆனால் அவர் எளிமையா நான் தான் ரஜினிகாந்த் அப்படின்னு சொன்னாரு அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்றார்.

சிவன் கூட சிட்டிங்

சிவன் கூட சிட்டிங்

கடைசியாக ரஜினி ஸ்டைலில் பஞ்ச் டயலாக் பேசினார் விவேக். அதாவது சிவன் கூட சிட்டிங்கும் போடுவார் எமன் கூட கட்டிங்கும் போடுவார் ரஜினிகாந்த், இவ்வாறு பேசினார் விவேக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X