கடனே இருக்கக்கூடாது.. திருப்பிலாம் கொடுக்க வேண்டாம்.. செல் முருகனின் கடனை அடைத்த நடிகர் விவேக்!

சென்னை: தனது நண்பரும் மேலாளருமான செல் முருகனின் கடனை நடிகர் விவேக் அடைத்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

VIVEKH அஸ்தி Marina Beachல் கரைக்கும் போது Cell Murugan Emotional

நடிகர் விவேக்கிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாளராகவும் அவருடைய நெருங்கிய நண்பராகவும் பணியாற்றியவர் நடிகர் செல் முருகன்.

ஆர்பிஜி செல் நிறுவனத்தில் பணியாற்றிய செல் முருகன் நடிகர் வையாபுரி மூலம் நடிகர் விவேக்கிற்கு அறிமுகமானார். தொடர்ந்து அவரிடம் மேலாளராக பணியாற்றிய அவருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

ஆனாலம் ஆபத்தான கட்டத்தில் இருந்த விவேக் கடந்த 17 ஆம் தேதி காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

யாரையும் தெரியாது

யாரையும் தெரியாது

அவருடைய மறைவு தனிப்பட்ட விதத்தில் நடிகர் செல்முருகனுக்கு பேரிழப்பாக உள்ளது. இறுதிச் சடங்கிலேயே கதறி அழுதார் செல் முருகன். விவேக்குடன் எடுத்த வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வரும் செல் முருகன் அவரை தவிர தனக்கு யாரையுமே தெரியாது என பதிவிட்டிருந்தார்.

கடனை அடைத்த விவேக்

கடனை அடைத்த விவேக்


மேலும் நடிகர் விவேக்குடன் எடுத்த வீடியோவை வெளியிட்ட செல் முருகன், ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விவேக் செல் முருகனின் கடனை அடைத்த தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பி தர வேண்டாம்

திருப்பி தர வேண்டாம்

அதாவது செல் முருகன் கடன் நெருக்கடியில் இருந்தபோது நடிகர் விவேக் மொத்த பணத்தையும் கொடுத்து அவரது கடனை செட்டில் செய்துள்ளார். மேலும் கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்று கூறிய விவேக், தான் கடனை அடைத்த பணத்தை திருப்பி தர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பல தருணங்களில் உதவி

பல தருணங்களில் உதவி

இதேபோல் பல தருணங்களில் நடிகர் விவேக், செல் முருகனுக்கு உதவி செய்துள்ளார். இதனாலேயே கடைசி வரை நடிகர் விவேக்கை விட்டு பிரியாமல் அவருடனே பயணித்து வந்துள்ளார் செல்முருகன்.

More from Filmibeat

Read more about: vivek விவேக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X