அஜீத்துடன் நடிப்பது இனிய அனுபவம்!- விவேக்
அஜீத்துடன் மீண்டும் நடிப்பது மிகவும் எளிமையாக உள்ளது, இனிய அனுபவத்தைத் தந்துள்ளது என்கிறார் நடிகர் விவேக்.
'வீரம்' படத்தை தொடர்ந்து, ஏ எம் ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.
இந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.

சத்யா
இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘சத்யா' என்று பெயரிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எண்பதுகளில் கமல் ஹாஸன் நடித்த படத்தின் தலைப்பு இது. படத்தில் அஜீத்தின் கேரக்டர் சத்யா என்பதால், அதையை தலைப்பாக வைக்க அஜீத்துக்கும் விருப்பம்தான்.

விவேக்
இந்தப் படத்தில் அஜீத்துடன் நடிக்கிறார் விவேக். ஏற்கெனவே வாலி உள்பட பல படங்களில் அஜீத்துடன் நடித்தவர்தான் விவேக். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.

மின்னலேவுக்குப் பிறகு
மின்னலே படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் படத்தில் இப்போதுதான் மீண்டும் நடிக்கிறார் விவேக். இந்தப் படத்தில் முறுக்கு மீசை வைத்து காமெடி செய்கிறார்.

இனிய அனுபவம்
அஜீத்துடன் இணைந்து நடிப்பது சுலபமாக இருக்கிறது என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கவுதம் மேனன் - அஜீத்துடன் நான் இப்படத்தில் இணைந்தது இனிய அனுபவம் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











