'ரஜினி பேச்சு வெளிப்படையாக இருந்தது. ஆனால்.." - நடிகர் விவேக் கருத்து
Recommended Video

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் ஏ.சி.சண்முகம் தனது கல்லூரியில் அமைத்திருந்த எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ரஜினிகாந்த்தின் பேச்சு பெரும்பாலானோரைக் கவர்ந்துள்ளது. தெளிவாகப் பேசியிருப்பதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விவேக், ரஜினியின் பேச்சு பற்றி ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் பேச்சு
நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த விழாவில் அவரின் பேச்சு தமிழ் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தெளிவாகப் பேசிய ரஜினி
இந்த நிகழ்ச்சியில் தன் மீது சமூக வலைதளங்களில் வைக்ப்படும் விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும்விதமாகப் பேசினார் ரஜினி. எம்.ஜி.ஆர் ரஜினிக்கு உதவிய தருணங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
விவேக் ட்வீட்
இந்த விழாவில் ரஜினியின் பேச்சு பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்! இவை உண்மையாக இருந்தது."என பதிவு செய்துள்ளார்.

மக்களே நீதிபதிகள்
"இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!" இவ்வாறு விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











