twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்று ஶ்ரீலங்கா.. இன்று சிரியா.. - சிரியா தாக்குதல் பற்றி விவேக் கருத்து

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    சிரியா தாக்குதல் பற்றி விவேக், சந்தோஷ் நாராயணன் கருத்து!- வீடியோ

    சென்னை : சிரியா நாட்டு ராணுவம் கிளர்ச்சியாளர்களின் மீது தொடுத்திருக்கும் தாக்குதலில் அப்பாவிக் குழந்தைகள் பலரும் பலியாகி இருக்கிறார்கள்.

    சிரியா நாட்டு அரசு மக்கள் மீது நடத்தும் ரசாயண குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை உலக மக்கள் யாராலும் ஏற்க முடியவில்லை.

    ரசாயண குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த சிறு குழந்தைகளின் புகைப்படங்கள் நெஞ்சை உருக்குகின்றன. இந்தச் சம்பவம் குறித்து பிரபலங்கள் என்று கூறியிருக்கும் கருத்துகளைப் பார்க்கலாம்.

    ரத்த பூமியான சிரியா

    ரத்த பூமியான சிரியா

    என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஓடி விளையாடும் வயதில் ரத்தத்தையும், குண்டு வெடிப்பையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் சிரியா நாட்டு குழந்தைகள். ஒட்டுமொத்த சிரியாவும் தற்போது ரத்த பூமியாகவே காட்சியளிக்கிறது.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    சிரியா தாக்குதலின்போதான ஒவ்வொரு புகைப்படங்களும் பார்ப்போர் உள்ளத்தை பெரிதும் தாக்குகிறது. இதுகுறித்து பிரபலங்களும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிரியா சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார்.

    அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா

    "பிஞ்சுக் குழந்தைகளின் கண்ணீரும் ரத்தமும் நெஞ்சு பிளக்கிறதே. அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா. சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான்." என ட்வீட் செய்திருக்கிறார் நடிகர் விவேக்.

    சந்தோஷ் நாராயணன் ட்வீட்

    எண்ணற்ற அப்பாவிக் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் சாவதைப் பார்க்கும்போது, நான் தனியாக இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் குற்றவுணர்ச்சியோடும், இயலாமையாலும் வருந்துகிறேன். #SaveSyria என ட்வீட் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

    English summary
    Many innocent children have been killed in the attack on the insurgents in Syria. "Yesterday SriLanka.. Today Syria, children as well as humanity are dead" said actor Vivek.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X