twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழக அரசுக்கு விவேக்கின் மனைவி கண்ணீர் மல்க நன்றி !

    |

    சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்த தமிழக அரசுக்கு விவேக்கின் மனைவி அருட்செல்வி நன்றி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    ACTOR VIVEKH FAMILY PRESSMEET | Filmibeat Tamil

    குடும்பத்தினருடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறைக்கும், அவரது ரசிகர்களுக்கும் இறுதிவரை உடன் இருந்த நடிகர், நடிகைகளுக்கும் நன்றி என கூறினார்.

    நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !

    இதேபோல தென்னிந்திய நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தார்

    உயிரிழந்தார்

    நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    அரசு மரியாதை

    அரசு மரியாதை

    விவேக்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மாயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.

    தமிழக அரசுக்கு நன்றி

    தமிழக அரசுக்கு நன்றி

    இந்நிலையில் , குடும்பத்தினருடன் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி என கூறினார். மேலும் பேசிய அவர், காவல் துறைக்கும், அவரது ரசிகர்களுக்கும், இறுதிச்சடங்குவரை உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி என கூறினார்.

    மனமார்ந்த நன்றி

    மனமார்ந்த நன்றி

    இதேபோல, தென்னிந்திய நடிகர் சங்கமும், காவல்துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதிச்சடங்கு நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vivek Wife Arulselvi Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X