கவுண்டமணி பிறந்த நாள்.. நேரில் வாழ்த்துச் சொன்ன விவேக்!

By Shankar

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார் நடிகர் விவேக்.

தமிழ் திரையுலகில் இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்பவர் கவுண்டமணி. இன்றும் அவரது நகைச்சுவைதான் அதிக மக்களால் விரும்பப்படும் பொழுதுபோக்காகத் திகழ்கிறது.

கவுண்டமணி இதுவரை சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

Vivek wishes Goundamani

வில்லன், குணச்சித்திர நகைச்சுவை நடிகர் என அத்தனை வேடங்களிலும் கலக்கியவர். தன்னுடைய பிறந்தாளை நேற்று கொண்டாடினார்.

அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கவுண்டமணி பிறந்தநாளை யொட்டி அவர் வீட்டுக்கே சென்று காமெடி நடிகர் விவேக் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது விவேக்கிடம், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் கவுண்டமணி. தான் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிக் கூறியதும், "நீ ஒருத்தன்தான் காமெடி பண்ணிக்கிட்டிருந்த.. நீயும் சீரியஸா நடிக்க ஆரம்பிச்சிட்டியா?" என்று ஜாலியாகக் கேட்ட கவுண்டமணி, பின்னர் விவேக் ஹீரோவாக வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாராம்.

கவுண்டமணியுடன் விவேக் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவற்றில் பெரிய வீட்டு மாப்பிள்ளை, உனக்காக எல்லாம் உனக்காக, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற ஹிட் படங்களில் இருவரும் காமெடியில் கலக்கியுள்ளனர்.

கவுண்டமணியை அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசுவது விவேக் வழக்கம்.

கவுண்டமணி தற்போது 'வாய்மை', '49 ஓ' ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X