உங்கள் தான தர்மம் நிச்சயம் உங்களைக் காக்கும்..! விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விவேக்!
விஜயகாந்துக்கு விவேக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்
சென்னை: நீங்கள் செய்த தான தர்மங்கள் உங்களை காக்கும் என்று விவேக் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
கேப்டன், புரட்சிக்கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களாலும் மக்களாலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் இன்று 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ரசிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் வாழ்த்து மழையில் நெகிழச் செய்துள்ளனர்.
நடிகர் விவேக் விஜயகாந்துக்கு விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், "இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் அவர்கள் நல்ல உடல் நலம் திரும்ப பெற்று பல்லாண்டு வாழவும், பிறரை வாழவைக்கவும் வேண்டும். அவர் செய்த தான தர்மம் அவரை நிச்சயம் காக்கும்" என ட்வீட் செய்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைபெற்று நாடு திரும்பிய விஜயகாந்த், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று சமீபத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது மனைவி பிரேமலாதாவும், மைத்துனர் சுதீஷும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அதனால், அவரின் இந்த 66வது பிறந்த நாளில் விரைவில் நலம்பெற்று பழைய விஜயகாந்தாக வரவேண்டுமென்பது அனைவரின் ஆசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











