twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்களை மிரட்ட வேண்டாம்: விவேக் சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் மிரட்டும் போக்கு நல்லதல்ல என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.நகைச்சுவை நடிகர் விவேக் சமீப காலமாக ஊர் ஊராகச் சென்று தனது ரசிகர்களை சந்திப்பது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வது, செல்லுகின்ற பகுதிகளில் நிருபர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பேட்டி கொடுப்பது என தனது டிராக்கைமாற்றிக் கொண்டு வருகிறார்.கடந்த ஒரு வாரத்தில் நெல்லை, மதுரை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு விசிட் அடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விவேக், செவ்வாய்க் கிழமை சேலத்திற்கு வந்தார்.அங்கும் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். விவேக் கூறுகையில்,காமெடி நடிகர்கள் ஹீரோவாக நிலைக்க முடியாது என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.ஏராளமான படங்களில் நடிகர் நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் காமெடிக்காகவே பல படங்கள் 100நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. இதே போல நான் கதாநாயகனாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் வந்த பிறகு பாருங்கள்.தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.சினிமாவில் சீர்திருத்தக் கருத்துக்களை கூறுவதால் நான் பெரியார் ஆகி விடமுடியாது. அவரைப் போல யாராலும் ஆக முடியாது.அவரைப் போல தாடி வேண்டுமானால் வளர்க்கலாம் என்று கூறிய அவரிடம், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்துகேட்ட போது, சிறந்த இந்தியக் குடிமகன் விருது பெற்றுள்ள விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை.அவர் அரசியலுக்கு வந்தால் சாதிப்பாரா என்பதே இப்போதைக்கு எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. அதைப் பற்றி என்னாலும்இப்போது எதுவும் கூற முடியாது. அவர் முதலில் அரசியலில் கால் பதிக்கட்டும். பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றுநழுவிய விவேக், திடீரென ஆவேசம் வந்தவராக அரசியல்வாதிகளை ஒரு பிடிபிடித்தார்.தற்போது சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் தேவையில்லாமல் மிரட்டுவது ஒரு டிரெண்டாகி வருகிறது. இதற்கு என்னகாரணம் தெரியுமா? கலைஞர்களிடேயே ஒற்றுமை இல்லாதது தான்.சினிமாவில் புகை பிடிப்பது போல காட்சிகள் வரக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த உத்தரவால் எத்தனை பேர் புகைபிடிப்பதை நிறுத்தி விடப்போகிறார்கள்? இது போன்ற தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தாமல் நாட்டுக்குத்தேவையானவற்றை அரசியல்வாதிகள் செய்ய வேண்டும் என்றார் சூடாக.

    By Staff
    |

    சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் மிரட்டும் போக்கு நல்லதல்ல என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

    நகைச்சுவை நடிகர் விவேக் சமீப காலமாக ஊர் ஊராகச் சென்று தனது ரசிகர்களை சந்திப்பது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வது, செல்லுகின்ற பகுதிகளில் நிருபர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பேட்டி கொடுப்பது என தனது டிராக்கைமாற்றிக் கொண்டு வருகிறார்.

    கடந்த ஒரு வாரத்தில் நெல்லை, மதுரை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு விசிட் அடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விவேக், செவ்வாய்க் கிழமை சேலத்திற்கு வந்தார்.

    அங்கும் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். விவேக் கூறுகையில்,காமெடி நடிகர்கள் ஹீரோவாக நிலைக்க முடியாது என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

    ஏராளமான படங்களில் நடிகர் நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் காமெடிக்காகவே பல படங்கள் 100நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. இதே போல நான் கதாநாயகனாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் வந்த பிறகு பாருங்கள்.தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.

    சினிமாவில் சீர்திருத்தக் கருத்துக்களை கூறுவதால் நான் பெரியார் ஆகி விடமுடியாது. அவரைப் போல யாராலும் ஆக முடியாது.அவரைப் போல தாடி வேண்டுமானால் வளர்க்கலாம் என்று கூறிய அவரிடம், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்துகேட்ட போது, சிறந்த இந்தியக் குடிமகன் விருது பெற்றுள்ள விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை.


    அவர் அரசியலுக்கு வந்தால் சாதிப்பாரா என்பதே இப்போதைக்கு எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. அதைப் பற்றி என்னாலும்இப்போது எதுவும் கூற முடியாது. அவர் முதலில் அரசியலில் கால் பதிக்கட்டும். பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றுநழுவிய விவேக், திடீரென ஆவேசம் வந்தவராக அரசியல்வாதிகளை ஒரு பிடிபிடித்தார்.

    தற்போது சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் தேவையில்லாமல் மிரட்டுவது ஒரு டிரெண்டாகி வருகிறது. இதற்கு என்னகாரணம் தெரியுமா? கலைஞர்களிடேயே ஒற்றுமை இல்லாதது தான்.

    சினிமாவில் புகை பிடிப்பது போல காட்சிகள் வரக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த உத்தரவால் எத்தனை பேர் புகைபிடிப்பதை நிறுத்தி விடப்போகிறார்கள்? இது போன்ற தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தாமல் நாட்டுக்குத்தேவையானவற்றை அரசியல்வாதிகள் செய்ய வேண்டும் என்றார் சூடாக.

      Read more about: vivek condems politicians
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X