For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாதி விழாவில் பங்கேற்பதில் தயக்கமில்லை: நடிகர் விவேக்

By Staff
|

திருநெல்வேலி:

ஜாதி விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை, இதனால் என் மீது ஜாதி முத்திரை விழுந்தாலும்கவலையில்லை என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

ஜாதி ரீதியாக நடிகர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முற்படும் காலம் இது. நடிக்க வரும்போது தான் எந்த ஜாதியைச்சேர்ந்தவர் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத நடிகர்கள், நடித்து முடித்து ஒரு அந்தஸ்துக்கு வந்த பிறகு, அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், வேறு பாதையில் செல்வதற்கு உகந்த வழியாகவும் தங்களது ஜாதிக்கு ஆதரவாக களம்இறங்குகிறார்கள்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் கார்த்திக். சமீப காலமாக அவர் தேவர் இனத்தவரை ஒன்று திரட்டி வருகிறார்.அரசியல் களத்தில் குதிக்க கார்த்திக் ஆயத்தமாவதாக ஒரு பக்கம் பேச்சு இருந்தாலும், தான் தொடங்கியுள்ள சரணாலயம்அமைப்பு ஜாதி, மத பேதமற்ற ஒரு தொண்டு நிறுவனம் என்று கார்த்திக் மறுத்து வருகிறார். இருப்பினும் தேவர் இனஇளைஞர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கும் பணியில் அவர் தீவிரமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது இன்னொரு பிரபல நடிகரும் ஜாதி அடையாளத்தை வெளிப்படையாக காட்டத் தொடங்கியுள்ளார். அவர்தான் சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விவேக்.

விவேக்கும் தேவர் இனத்தவர்தான். ஆனால் இதை இதுநாள் வரை பகிரங்கமாக அவர் கூறிக் கொண்டதில்லை. மாறாக தனதுபடங்களில் ஜாதி, மத துவேஷங்களுக்கு எதிராகவே வசனம் பேசி வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் தேவர் இனத்தவரின்நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, நான் தேவர் இனத்தவர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என தடாலடியாகபேசினார்.

இந்த வியப்பு மறைவதற்குள் இன்னொரு தேவர் இன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ஒரு முறை வியப்பேற்படுத்தியுள்ளார்விவேக். திருநெல்வேலி மாவட்டம் நெல்கட்டும்சேவல் கிராமத்தில், பூலித் தேவனின் 291வது பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. இதில் நடிகர்கள் விவேக், செந்தில், அருண் பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின்கணவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவர் சமூகத்தின் பெருமைகளைப் பற்றி சிலாகித்துப் பேசினர்.

அதிலும், விவேக்கின் பேச்சுக்குத்தான் கூடியிருந்த கூட்டத்தினரிடையே செம வரவேற்பு. விவேக்கின் பேச்சில் ஜாதிப் பாசம்அப்பட்டமாக தெரிந்தது. விவேக் பேசுகையில், இதுபோன்ற விழாக்களில் நான் கலந்து கொள்வதால் என் மீது ஜாதி முத்திரைவிழும் என்கிறார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து இதுமாதிரியான நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்துகொள்வேன்.

இங்கே கூடியுள்ள நமது இனவத்தவர்கள், அவர்கள் கையில் உள்ள ஹார்டுவேர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சாப்ட்வேர்போன்ற துறையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். அறிவு, கல்வி, புத்திசாலித்தனம் மட்டுமே நம்மை வளர்க்க உதவும், ஆத்திரம்,சினம், அறியாமை ஆகிய மூன்றும் நம்மை படுகுழியில் தள்ளி விடும்.

காலையில் எழுந்ததுமே டாஸ்மாக் கடைகளுக்குப் போவதை நம்மவர்கள் விட்டு விட வேண்டும். காலையில் கடைக்குப்போகும் அவர்கள் இரவில் பிள்ளைகள் தூங்கிய பிறகுதான் வீட்டுக்கே வருகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள்தான்நமது இனக் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு நல்ல கல்வி புகட்டுங்கள். அப்துல் கலாம் போன்றுஉயரிய மனிதனாக அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு நம் இனப் பெண்களுக்கு உள்ளது.

எதற்கெடுத்தாலும் அரிவாளைத் தூக்குவது, ஜாதிச் சண்டையில் ஈடுபடுவதை விட்டு விடுங்கள். நாம் போக வேண்டிய பாதைநிறைய பாக்கி உள்ளது.

முக்குலத்தோர் தமிழை வளர்த்த விதம் குறித்து நாம் விளக்க வேண்டியதில்லை. அவர்களை விட வேறு யார் தமிழை வளர்க்கமுடியும்? எனவே இந்த இடத்தில் வ.உ.சியைப் பற்றியோ, உ.வே. சாமிநாதய்யர் பற்றியோ நான் பேச விரும்பவில்லை.விவேகானந்தர் வெளிநாடு போக காசு கொடுத்து உதவியவர் நமது இனத்தைச் சேர்ந்த பாஸ்கர சேதுபதி மன்னர்தான்.

உங்கள் அன்பின் காரணமாகத்தான் இங்கே நான் வந்துள்ளேன். எனவே ஜாதி பற்று என்று என்னைப் பற்றி பத்திரிக்கைகளில்எழுதினாலும் எனக்குக் கவலையில்லை. இனிமேல் அடிக்கடி உங்களை சந்திப்பேன்.

நடிகர் கார்த்திக்கின் ரசிகர்களும் எனது ரசிகர்கள்தான். காரணம், நானே கார்த்திக்கின் தீவிர ரசிகன். அவர் ரொம்ப நாளாகவேஎதையோ சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதை சொல்ல விடாமல் நீங்கள் தடுக்கிறீர்கள். இப்போது கூடமதுரையில் நடந்த கார்த்திக் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரைப் பேச விடாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள். உங்களுக்குபொறுமை மிகவும் அவசியம். குணத்தால் கார்த்திக் ஒரு குழந்தை, அந்தக் குழந்தையை ரொம்பவும் வருத்தப்பட வைக்காதீர்கள்.

நம் இனத்தில் உள்ள ஒவ்வொரு படித்த இளைஞரும், படிக்காத நமது இனத்தவருக்கு படிப்பு சொல்லித் தாருங்கள்.அவர்களையும் அறிவாளிகளாக மாற்றுங்கள். இப்போது கூட நிறையப் பேர் மரத்தின் மீது ஏறி நின்று எனது பேச்சைக்கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் கீழே இறங்கி வர வேண்டும். அந்த மண்டைக்குள் அறிவை இறக்க வேண்டும் என்று பேசினார்விவேக்.

தேவர் இனத்தைச் சேர்ந்த நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது சமுதாய மக்களிடம் வர ஆரம்பித்திருப்பது தமிழகத்தில் புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more