»   »  தந்தி டிவி பாண்டே மீது நடிகர் விவேக்கிற்கு என்ன கோபம்?

தந்தி டிவி பாண்டே மீது நடிகர் விவேக்கிற்கு என்ன கோபம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விவேக் ட்விட்டரில் போட்டிருக்கும் சமாச்சாரத்தை பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். நான் யார் வெற்றியையும் திருடவில்லை நிம்மதியாக வேலை பார்க்க விடுங்கள் என்றார்.

Vivekh appreciates Memes boys

அவர் அழுத கையோடு தந்தி டிவியில் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என அடம்பிடித்த சிவாவை பெருமுயற்சி செய்து அழைத்து வந்தனர். சிவா வர மாட்டேன் என்று அடம்பிடித்த தகவலை நிகழ்ச்சியில் தெரிவித்ததே பாண்டே தான்.

முதல்வர் மருத்துவமனையில் இருக்கிறார், விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறார்கள் இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்க ஒரு நடிகர் அழுதால் உடனே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேட்டி எடுப்பதா என நெட்டிசன்கள் பாண்டேவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மீம்ஸை பார்த்த விவேக்கிற்கும் நெட்டிசன்களுக்கு தோன்றியதே தான் தோன்றியுள்ளது போலும். உடனே ஒரு மீம்ஸை எடுத்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த மீம்ஸுக்கு அவர் கொடுத்துள்ள தலைப்பு 'மீம்ஸ் போடும் இளைஞர்களின் நகைச்சுவை அதி அற்புதம்! '

English summary
Actor Vivekh has appreciated the humour sense of people who display memes on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil