விஸ்வாசத்தில் நடிக்கும் அஜித்துக்கு ராசியான நடிகர்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தில் விவேக் நடிக்க உள்ளார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் விவேக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் ஆகிய நகைக்சுவை நடிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் படத்தில் விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
விவேக்
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ளதை விவேக் ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நகைச்சுவை
அஜித், விவேக் கூட்டணி ரசிகர்கள் கொண்டாடும் கூட்டணி ஆகும். கடைசியாக அஜித், விவேக் சேர்ந்து நடித்த படம் என்னை அறிந்தால். இந்நிலையில் மீண்டும் அஜித்துடன் சேர்ந்து நடிக்கிறார் விவேக்.

வாலி
அஜித்தும், விவேக்கும் சேர்ந்து மைனர் மாப்பிள்ளை, பகைவன், காதல் மன்னன், வாலி, உன்னைத் தேடி, முகவரி, ஆழ்வார், பூவெல்லாம் உன் வாசம், பரமசிவன், கிரீடம், என்னை அறிந்தால் ஆகிய 11 படங்களில் நடித்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
விவேக்கின் கதாபாத்திரம் வெயிட்டானதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சும்மா தெறிக்கவிடுங்க சார் என்று ரசிகர்கள் விவேக்கை வாழ்த்தியுள்ளனர். அஜித், விவேக் வெற்றிக் கூட்டணியால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











