twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?: நடிகர் விவேக்கை விளாசிய நெட்டிசன்கள்

    By Siva
    |

    Recommended Video

    பெண்களை சமயலறைக்கு போக சொன்ன விவேக் - வீடியோ

    சென்னை: கோடை விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும் என்று ட்வீட் போட்ட நடிகர் விவேக்கை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளை பெற்றோர் சம்மர் கேம்புக்கு அனுப்பி வைக்கிறார்கள். சிலர் உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் நடிகர் விவேக் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

    விவேக்

    அன்புள்ள மாணவர்கள் மற்றும் குழந்தைகள், கோடை விடுமுறையை என்ஜாய் செய்யுங்கள். விளையாடிய பிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். பெண் பிள்ளைகளே, சமையல் அறையில் தாய்க்கு உதவியாக இருந்து, சமையல் கற்றுக் கொள்ளவும். ஆண் பிள்ளைகள், தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அவர் உங்களின் குடும்பத்திற்காக எப்படி உழைக்கிறார் என்பதை பார்க்கவும். உறவு மேம்படும் என்று விவேக் ட்வீட்டியுள்ளார்.

    கோபம்

    இன்னும் பெண் பிள்ளைகள் சமையல் அறையில் தான் இருக்க வேண்டுமா? நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று விவேக்கின் ட்வீட்டை பார்த்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஏமாற்றம்

    ஆண், பெண் பிள்ளைகளை நீங்கள் இப்படி பிரித்துப் பார்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அது என்ன பெண் பிள்ளைகள் என்றால் சமையல் அறைக்கு தான் செல்ல வேண்டுமா என்று ரசிகர்கள் ட்வீட்டியுள்ளனர்.

    பெண்கள்

    உங்களின் ட்வீட்டை பார்த்துவிட்டு பெண்கள் சங்கத்தினர் உங்களின் வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்தப் போகிறார்கள். ஏன் இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்கிறீர்கள் என்று சிலர் கேட்டுள்ளனர்.

    English summary
    Actor Vivekh's advice to school kids has gone wrong. Tweeples are blasting him for his narrow mindedness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X